பவானியின் குறுக்கே கேரளம் அணை கட்டுவதை எதிர்த்து விவசாயிகள் உண்ணாவிரதம்
கோயம்புத்தூர்:
பவானி ஆற்றின் குறுக்கே கேரளா அணை கட்டுவதை எதிர்த்து உண்ணாவிரதப் போராட்டங்கள் நடத்த அனைத்துக் கட்சிகளின்விவச ாய சங்கங்களும் முடிவு செய்துள்ளன.
தமிழகத்தின் நீலகிரி மலைத் தொடரில் உருவாகும் பவானி கேரளாவுக்குள் நுழைந்து விட்டு மீண்டும் தமிழகத்துகுக்குள்வருகிறது. இந் நிலையில் தங்களது மாநிலத்துக்குள் பவானி ஆற்றின் குறுக்கே அணையைக் கட்டி நீர் தமிழகத்துக்குச் செல்வதைத்தடுக்க கேரளம் முயல்கிறது.
இதையடுத்து கேரளத்துக்குள் பவானி நுழையும் முன்பே அணையைக் கட்டி நீர் கேரளத்துக்குள்ளேயே நுழையாமல் தடுக்கப்போவதாக தமிழகம் மிரட்டி வருகிறது.
இந் நிலையில் கேரள அரசு அணை கட்டுவதை எதிர்த்துப் போராட அனைத்துக் கட்சிகளின் விவசாயப் பிரிவுகளின் கூட்டம்நேற்றிரவு கோயம்புத்தூரில் நடந்தது. இதில் கட்சிகள் தவிர்த்த பிற விவசாய சங்கங்களும் கலந்து கொண்டன.
கோவை, மேட்டுப்பாளையம், திருப்பூர், சத்தியமங்கலம், ஈரோடு ஆகிய இடங்களில் வரும் 27ம் தேதி உண்ணாவிரதப்போராட்டம் நடத்துவது என்று இக் கூட்டத்தில் முடிவு செய்யப்பட்டது. கேரளம் அணை கட்டினால் மேற்கூறப்பட்ட பகுதிகளில்விவசாயம் பெருமளவு பாதிக்கப்படும் என்பது குறிப்பிடத்தக்கது.
மேலும் போராட்டத்தை தொடர்ந்து நடத்த ஒரு போராட்டக் கமிட்டியை அமைக்கவும் இக் கூட்டத்தில் முடிவு செய்யப்பட்டுள்ளது.கேரளம் அணையைக் கட்ட ஆரம்பப் பணிகளை மேற்கொண்டுள்ள முக்காலி பகுதிக்கு வரும் 18ம் தேதி இக் குழு செல்லும்.
-->
-
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள் -
நான் பார்த்துகிறேன் நண்பா.. உறுதியாக சொன்ன விஜய்.. அஜித் தாய் மறைந்த இரவு.. நடந்தது என்ன? -
பிளாக் அண்ட் ஒயிட் கோட் சூட் அணிவது இதற்காகத் தான்.. ரகசியத்தை போட்டு உடைத்த விஜய்! -
காலியான ராஜ்யசபா எம்பி பதவி! இன்று வேட்புமனு தாக்கல் தொடக்கம்! தவெகவின் முதல் எம்பி யார்?












Click it and Unblock the Notifications