ஆபாசப் படம் காட்டிய தியேட்டர் லைசன்ஸ் ரத்து சரியே: உயர் நீதிமன்றம்

Subscribe to Oneindia Tamil

சென்னை:

"முதலமைச்சர் வைஜெயந்தி" என்ற படத்திற்கு இடையே ஆபாச காட்சிகளை ஒளிபரப்பிய தியேட்டரின் உரிமத்தைதற்காலிகமாக ரத்து செய்தது சரியான நடவடிக்கைதான் என்று சென்னை உயர் நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது.

திண்டுக்கல் மாவட்டம் ஒட்டன் சத்திரம் நகரில் உள்ளது அருணா தியேட்டரில் "முதலமைச்சர் வைஜெயந்தி" என்றபடம் திரையிடப்பட்டது. அப்போது படத்திற்கு இடையே ஆபாச காட்சிகளும் ஒளிபரப்பாகின.

இதுகுறித்துத் தகவல் அறிந்ததும் போலீஸார் விரைந்து சென்று ஆபாசக் காட்சிகள் அடங்கிய பிலிம் சுருளைக்கைப்பற்றினர். தியேட்டருக்கு சீல் வைக்கப்பட்டு, தியேட்டரின் லைசென்சும் தற்காலிகமாக ரத்து செய்யப்பட்டது.

இதை எதிர்த்து தியேட்டர் உரிமையாளர் உயர் நீதிமன்றத்தில் வழக்குத் தொடர்ந்தார். அதை விசாரித்த நீதிபதிசதாசிவன், உரிமையாளரின் மனுவை தள்ளுபடி செய்தும், போலீஸ் நடவடிக்கையை ஆதரித்தும் தீர்ப்பளித்தார்.

தனது தீர்ப்பில், இதுபோன்ற செயல்களை வளர விட்டாலோ ஆதரித்தாலோ இளைஞர்கள் சமுதாயமே சீர்கெட்டுப்போகும் அபாயம் உள்ளது. பாலியல் பலாத்கார சம்பவங்கள் அதிகரிக்கும் நிலை ஏற்பட்டு விடும்.

எனவே ஒட்டன்சத்திரம் போலீசார் மேற்கொண்ட நடவடிக்கை சரியானதுதான். இதுபோன்ற கடும் நடவடிக்கைகள்எடுத்தால் மட்டுமே இவற்றை தடுக்க முடியும் என்றார் நீதிபதி சதாசிவன்.

-->

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+