• search
For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

இலவச உணவு வழங்குவதில் பெரும் குளறுபடி: விவசாயிகளிடையே வரவேற்பு இல்லை

By Staff
|

தஞ்சாவூர்:

தமிழக அரசு அறிமுகப்படுத்தியுள்ள இலவச உணவுத் திட்டத்துக்கு விவசாயிகள் இடையே இரண்டாவது நாளான இன்றும்வரவேற்பு இல்லை.

இந்த உணவுத் திட்டத்துக்காகப் பதிவு செய்து கூப்பன்களை வாங்கிய விவசாயிகள் எண்ணிக்கை மிகவும் குறைவாகவே உள்ளது.கூப்பன் வாங்கியவர்களிலும் கூட மூன்றில் ஒரு பகுதியினர் தான் உணவைப் பெற்றுள்ளனர்.

கூப்பன்களை விவசாயிகள் வாங்க முன் வரவில்லை என்பது போன்ற ஒரு தோற்றம் இருந்தாலும் முறையாக இவர்களுக்குக்கூப்பன் தரப்படவில்லை என்பது தான் உண்மை. யாருக்குக் கூப்பன் தரலாம் என்பதை கிராம தலையாரிகள் தான் முடிவுசெய்கின்றனர்.

இந்த தலையாரிகள் ஆளும் கட்சி வெள்ளை வேட்டிகளின் அடிமைகள் போல செயல்படுவது வழக்கம். இப்போது இந்த ஆளும்கட்சியினர் யாருக்குச் சொல்கிறார்களோ அவர்களுக்கு மட்டுமே கூப்பன்கள் வழங்கலாம் என்பதற்கான சான்றிதழைதலையாரிகள் தந்துள்ளனர்.

20 லட்சம் பேருக்கு சோறு போடப் போகிறோம் என்று அரசு கூறினாலும் அவ்வளவு பேருக்கு உணவு சமைக்கத் தேவையானதானியங்களும் காய்கறிகளும் சத்துணவுக் கூடங்களுக்கு வழங்கப்படவில்லை.

இதனால் பல கூடங்களில் மிகக் குறைவான உணவே சமைக்கப்பட்டிருந்தது. உணவு வாங்க வந்த பலரும் வெறும் தட்டுக்களுடன்திரும்பிச் சென்றனர்.

பெரும் குறைபாடுகளுடன் இத் திட்டம் அமலாக்கப்பட்டாலும் அதை பத்திரிக்கைகளிலும் டிவி கேமராக்களிலும் படம்பிடிப்பதால் எல்லா சத்துணவுக் கூடங்களிலும் அந்தந்தப் பகுதி ரத்தத்தின் ரத்தங்கள் பளீர் உடைகளில் வந்து நின்றுவிட்டனர்.உணவு கிடைக்காமல் திரும்பிச் சென்ற பல ஏழைகளின் வாயில் இந்த அரசியல்வாதிகள் விழுந்து வெளியே வந்ததைக் கேட்கமுடிந்தது.

மாவட்டத் தலைநகரங்களில் அந்தந்த மாவட்டங்களைச் சேர்ந்த அமைச்சர்கள் படாடோபத்துடன் இத் திட்டத்தைத் தொடங்கிவைத்தனர்.

தஞ்சாவூரில் திட்டை, சத்திரக்குடி ஆகிய இடங்களில் குறைவான உணவை சமைத்து வைத்துக் கொண்டு திட்டத்தைஆரம்பித்தனர். இதனால் பட்டினியுடன் வந்த நூற்றுக்கணக்கான விவசாயிகள் திரும்பிச் செல்லும் நிலைக்கு உள்ளாயினர். இதனால்கடுப்பாகிப் போன இந்த ஏழை மக்கள் சாலை மறியலிலும் ஈடுபட்டனர்.

பல சத்துணவுக் கூடங்களின் பொறுப்பாளர்களும் புலம்பித் தீர்க்காத நிலைக்குத் தள்ளப்பட்டுள்ளனர். போதிய காய்கறிகள்வழங்கப்படாததால் ஏதோ வீட்டுக்கு வாங்கியது மாதிரி அரை கிலோ கத்திரி, கால் கிலோ கேரட், 50 கிராம் பச்சை மிளகாயைவைத்துக் கொண்டு நூற்றுக்கணக்கானவர்களுக்கு உணவு சமைக்க வேண்டிய நிலைக்குத் தள்ளப்பட்டுள்ளனர்.

பல இடங்களில் தனியே சாம்பார் வைக்கும் அளவுக்கு காயோ, பருப்போ இல்லாததால் அரிசியையும் இருக்கும் பருப்பையும்காய்கறிகளையும் கலந்து ஏதோ ஒரு கலவை சாதமாகத் தயாரித்து வழங்கி வருகின்றனர்.

விவசாயிகளில் பெரும்பாலானவர்கள் இந்த இலவச உணவுத் திட்டத்தைப் புறக்கணித்துவிட்ட நிலையில் மிச்சம் மீதி உள்ளசொச்சம் விவசாயிகளுக்கே சரியாக உணவை வழங்க முடியாத நிலையில் தமிழக அரசு உள்ளது. இத் திட்டத்தை ஏற்று எல்லாஏழை விவசாயிகளும் கூப்பன்களை வாங்கிக் கொண்டு சத்துணவுக் கூடங்களுக்கு வந்திருந்தால் பெரும் வன்முறையேவெடித்திருக்கும்.

வறட்சியில் உச்ச கட்டத்தில் உள்ள ராமநாதபுரம் மாவட்டம் முழுவதுமே மொத்தம் 2,000 விவசாயிகள் மட்டுமே இலவச உணவுவாங்க முன் வந்துள்ளனர் என்றால் மற்ற மாவட்டங்கள் குறித்து சொல்லவே வேண்டாம்.

ஈரோட்டில் பல சத்துணவுக் கூடங்களில் அதிகபட்சம் 10 முதல் 12 விவசாயிகள் மட்டுமே வந்து உணவை வாங்கிச் சென்றனர்.

சேலத்தில் 800 பேருக்கு கூப்பன் கொடுத்துவிட்டு வெறும் 100 பேருக்கு மட்டுமே உணவு தயாரித்திருந்தனர். இதனால் உணவுகிடைக்காத மக்கள் இங்கும் சாலை மறியலில் இறங்கினர்.

தூத்துக்குடியிலும் திட்டம் அமல்:

இதற்கிடையே சாத்தான்குளம் தொகுதியில் இடைத் தேர்தல் நடக்க இருப்பதால் அத் தொகுதி அடங்கிய தூத்துக்குடிமாவட்டத்தில் இலவச உணவு வழங்க தேர்தல் ஆணையம் தடை விதித்திருந்தது.

ஆனால், இது தேர்தலுக்காக கொண்டு வரப்பட்ட திட்டமல்ல என்று கமிஷனுக்கு அரசு கடிதம் எழுதியது. இதையடுத்து இப்போதுஇந்த இலவச உணவு வழங்கும் திட்டத்தை தூத்துக்குடியிலும் அமலாக்க அரசுக்கு தேர்தல் கமிஷன் அனுமதி தந்துள்ளது.

கடும் எதிர்ப்பு:

இதற்கிடையே இந்த இலவச உணவு மிகவும் தரம் குறைவானதாகவும், உண்பதற்கே லாயக்கில்லாம் இருப்பதாகவும் காங்கிரஸ்செயல் தலைவர் இளங்கோவன் குற்றம் சாட்டியுள்ளார்.

அவர் கூறுகையில்,

இந்த இலவச உணவைப் பெற பல விவசாயிகள் முன் வரவில்லை. அப்படியே வேறு வழியில்லாமல் வந்துவிட்டவிவசாயிகளுக்கும் கூட மிகவும் தரம் குறைந்த உணவே தரப்பட்டு வருவதாக எங்கள் கட்சியினர் மாநிலம் முழுவதும் இருந்தும்தகவல்களை அனுப்பிய வண்ணம் உள்ளனர்.

இலவச உணவு தருகிறோம் என்று விவசாயிகளைக் கேவலப்படுத்துவதை விட்டுவிட்டு அவர்களுக்கு முடிந்த அளவு உணவுதானியத்தைத் தரவும் விவசாயக் குடும்பங்களுக்கு ரூ. 1,000 தரவும் அரசு முன் வர வேண்டும்.

விவசாயிகளும் மக்களும் பெரும் சிரமத்தில் வாழும் இந்தச் சூழ்நிலையில் ரூ. 2,000 கோடியில் புதிய நிர்வாக நகரத்தைஅமைக்கப் போகிறேன் என்று ஜெயலலிதா பேசிக் கொண்டிருப்பது எரிச்சலைத் தருகிறது. தமிழகம் இருக்கும் நிலையில் இந்தச்செலவு தேவையா?. இந்தப் பணத்தை அப்படியே பாதிக்கப்பட்ட விவசாயிகள் குடும்பத்திற்குக் கொடுக்கலாம் என்றார்இளங்கோவன்.

மார்க்சிஸ்ட் கண்டனம்:

உணவு தருகிறோம் என குறு, ஏழை விவசாயிகளையும், விவசாயத் தொழிலாளர்களையும் தட்டு ஏந்த வைத்துள்ள அரசுக்குமார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளது.

இதற்குப் பதிலாக அந்த மக்களுக்கு அரிசி, பருப்பைத் தந்து உதவுமாறு அக் கட்சியின் மாநிலச் செயலாளர் வரதராஜன்கோரிக்கை விடுத்துள்ளார். அது தான் தீர்வாக இருக்குமே தவிர இலவச உணவு என்பது பிரச்சனைக்கு ஒரு கண் துடைப்பாகவும்ஓட்டு வாங்கும் செயலாகவும் மட்டுமே அமையும் என்று கூறியுள்ளார்.

எல்லோருக்கும் உணவு தர முடியாது என்பதால் அனைவருக்கும் கூப்பன்களைத் தர வேண்டாம் என்றும், சிலருக்கு மட்டுமேதருமாறும் அதிகாரிகளுக்கு அரசு உத்தரவிட்டுள்ளது. இதனால் பல விவசாய ஏழைக் குடும்பங்களும் பட்டினியில் தவித்துவருகின்றன என்று வரதராஜன் சுட்டிக் காட்டியுள்ளார்.

󠣰 PQug ٶPlt;/b>

-->

Mail this to a friend  Post your feedback  Print this page 

 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X