IT Jobs: சென்னை உள்பட 4 இடங்களில் வேலைவாய்ப்பு.. ‘குவால்கம்' நிறுவனம் தரும் சூப்பர் சான்ஸ்
சென்னை: 'குவால்காம்' நிறுவனத்தில் சாப்ட்வேர் இன்ஜினியர் பணிக்கு ஆட்கள் தேர்வு செய்யப்பட உள்ளனர். தகுதி மற்றும் விருப்பம் உள்ளவர்கள் உடனடியாக விண்ணப்பம் செய்யலாம். பணிக்கு தேர்வாகும் நபர்கள் ஹைதராபாத், பெங்களூர், சென்னை, நொய்டா உள்ளிட்ட 4 இடங்களில் நியமனம் செய்யப்பட உள்ளனர்.
Qualcomm என்பது அமெரிக்காவை தலைமையிடமாக கொண்டு செயல்பட்டு வரும் மல்டி நேஷனல் டெக்னாலஜி சார்ந்த நிறுவனமாகும். இந்த நிறுவனம் ஸ்மார்ட் சாதனங்கள், லெச்போன் செயலிகள் மறஅறம் செயற்கை நுண்ணறிவு சிப்புகள் உள்பட பிற கம்ப்யூட்டர் சார்ந்த தொழில்நுட்பங்களை உருவாக்கி வருகிறது.

இந்த நிறுவனத்தில் தற்போது சாப்ட்வேர் இன்ஜினியர் பணிக்கு ஆட்கள் தேர்வு செய்யப்பட உள்ளனர். இந்த பணிக்கு இளநிலை படிப்பு என்றால் பிஇ, பிடெக்கில் இன்பர்மேஷன் சிஸ்டம், கம்ப்யூட்டர் சயின்ஸ் அல்லது அதற்கு தொடர்புடைய துறையில் படித்து இருக்க வேண்டும். மாஸ்டர்ஸ் என்றால் கம்யூட்டர் சயின்ஸ் இன்ஜினியரிங், கம்யூனிகேஷன் இன்ஜினியரிங், இசிஇ படிப்பை முடித்தவர்களாக இருக்க வேண்டும்.
இதுதவிர சில முக்கிய தகுதிகள் வேண்டும். விண்டோஸ் மொபைல், ஆண்ட்ராய்டு அல்லது லினக்ஸ்க்கான மொபைல் எஸ்டபிள்யூ டெவலப்மென்ட், ஓஎஸ் கான்செப்ட்ஸ், டேட்டா ஸ்ட்ரெக்சர்ஸ் புற்றிய புரிதல் இருக்க வேண்டும். சி, சி++ மற்றும் ஆப்செக்ட் ஒரியன்டட் டிசைன், சிடிஎம்ஏ, ஜிஎஸ்எம், யுஎம்டிஎஸ், வயர்லெஸ் நெட்வொர்க், எல்டிஇ, லினக்ஸ், யுனிக்ஸ் லினக்ஸ் டிரைவ்ஸ், லினக்ஸ் கேர்னல் டெவலப்மென்ட், உள்ளிட்டவை தெரிந்திருக்க வேண்டும்.
அனலிடிக்கில் மற்றும் பிரச்சனைகளை தீர்க்கும் திறன் இருப்பதோடு, ஆங்கிலத்தில் சரளமாக பேசவும், எழுதவும் தெரிந்திருக்க வேண்டும். இதுதவிர மேலும் சில முக்கிய தகுதிகள் பற்றிய விவரங்கள் கீழே உள்ள அதிகாரப்பூர்வ அறிவிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. தற்போதைய அறிவிப்பின்படி பணிக்கான சம்பளம் பற்றி எதுவும் தெரிவிக்கப்படவில்லை. இதுபற்றி கடைசி கட்ட இண்டர்வியூவில் தெரிவிக்கப்படும்.
தற்போதைய அறிவிப்பில் பணிக்கு விண்ணப்பம் செய்வதற்கான கடைசி தேதி எதுவும் தெரிவிக்கப்படவில்லை. இதனால் எப்போது வேண்டுமானாலும் விண்ணப்ப தேதி முடிவுக்கு வரலாம். எனவே தகுதி மற்றும் விருப்பம் உள்ளவர்கள் உடனடியாக விண்ணப்பம் செய்வது நல்லது. இப்படி விண்ணப்பம் செய்வோர் ஷார்ட் லிஸ்ட் செய்யப்பட்டு இண்டர்வியூவுக்கு அழைக்கப்படுவார்கள்.
பணிக்கு தேர்வாகும் நபர்கள் 4 இடங்களில் நியமனம் செய்யப்பட உள்ளனர். அதன்படி ஹைதராபாத், பெங்களூர், சென்னை மற்றும் நொய்டா ஆகிய இடங்களில் நியமனம் நடைபெற உள்ளது.
பணிக்கான அதிகாரப்பூர்வ அறிவிப்பு மற்றும் விண்ணப்பம் செய்ய Click Here
-
பெங்களூருக்கு வேட்டு! இந்தியாவிலேயே அதிக சம்பள உயர்வு கிடைக்கும் நகரம் எது தெரியுமா? -
தமிழ் பிழைகள் தமிழ்நாட்டையே வெட்கப்பட வைத்துள்ளது.. விஜய்யை விளாசிய வானதி சீனிவாசன்! -
முதல்வர் விஜய்யின் முதல் அரசு நிகழ்ச்சி.. ஒரே ஏஐ வீடியோவில் இத்தனை தமிழ்ப் பிழைகளா! -
மார்ட்டின் சொத்துகள் முடக்கம்: அமலாக்கத் துறை பதிலளிக்க சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவு -
பாஜகவுக்கு ஆதரவு தரும் திமுக? டெல்லியை அதிர வைக்க போகும் மாற்றம்.. ரெடியாகும் மாஸ்டர் பிளான் -
வெளிநாடு போயிருக்கதே 'ரீல்ஸ்' பார்த்துதான் தெரியுது.. அமைச்சர் கீர்த்தனாவை கலாய்த்த மேயர் பிரியா! -
வெளிப்படையாக வார்னிங் கொடுத்த விஜய்.. சிங்கப்பெண் நிகழ்ச்சியில் நடந்த முக்கிய விஷயம்! -
விஜய் - மோடி சந்திப்புக்கு பின்பு நடந்த முக்கிய மாற்றம்! தரமான செயல்..! #தமிழ்த்தாய்வாழ்த்து -
HDFC வங்கியால் கடன் வாங்கிய அனைவருக்கும் ஷாக்.. உங்க EMI அதிகரிக்க போகிறது? -
கடைசியில் ட்விஸ்ட்.. பாஜக சொன்ன பாயிண்டு! காங்கிரஸ் வேட்பாளர் மீனாட்சி நடராஜன் வேட்புமனு நிராகரிப்பு -
வெளிநாட்டு வாழ் இந்தியர்களுக்கு NRI ஜாக்பாட்! கையில் டாலர் இருந்தா போதும், RBI கொடுத்த மெகா சலுகை! -
தலைவரை நீக்குங்க.. விஜய் வென்றதும் வாட்ஸ் ஆப்பில் பறந்த மெசேஜ்! ரெடியாகும் தங்க நகை.. என்ன நடக்குது?












Click it and Unblock the Notifications