நாகப்பா கடத்தல்: வீரப்பனுக்கு உதவிய 2 சகோதரர்கள் கர்நாடகாவில் கைது
பெங்களூர்:
கர்நாடக முன்னாள் அமைச்சர் நாகப்பாவைக் கடத்த வீரப்பனுக்கு உதவியதாக மேலும் 2 சகோதரர்களைஅம்மாநில அதிரடிப்படையினர் கைது செய்துள்ளனர்.
நாகப்பாவைக் கடத்துவதற்காக வீரப்பனுக்கு உதவியதாக ஏற்கனவே ஏழு பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.இவர்களில் மூன்று பேர் கர்நாடகத்தைச் சேர்ந்தவர்கள்.
அவர்கள் கொடுத்த தகவல்களின் அடிப்படையில் கர்நாடக அதிரடிப்படையினர் கொள்ளேகால் பகுதியைச் சேர்ந்தநாராயணா என்பவரையும் அவருடைய தம்பி கிருஷ்ணாவையும் தற்போது கைது செய்துள்ளனர்.
கொள்ளேகால் அருகே லொக்கனஹள்ளி என்ற இடத்தில் உள்ள ஒரு கோவிலில் பதுங்கியிருந்த இந்த இரண்டுசகோதரர்களும் நேற்று கைது செய்யப்பட்டனர்.
நாகப்பாவைக் கடத்துவதற்கு முன் இந்த சகோதரர்களின் பண்ணை வீட்டில்தான் சுமார் 30 நாட்கள் வரை வீரப்பன்தங்கியிருந்தான் என்று இந்தச் சகோதரர்கள் ஒப்புக் கொண்டனர். இவர்கள் ஐந்து முறை காட்டுக்குள் சென்றுவீரப்பனைச் சந்தித்துள்ளனர்.
நாராயணாவும், கிருஷ்ணாவும் வீரப்பனுக்கு அரிசி, பருப்பு ஆகியவற்றை சப்ளை செய்துள்ளனர். இதற்காகஅவனிடமிருந்து இந்த சகோதரர்கள் ஏராளமாகப் பணம் பெற்றுள்ளனர்.
மேலும் கர்நாடக அமைச்சர் ராஜு கெளடாவின் வீட்டை அடையாளம் காட்டியதற்காக கிருஷ்ணாவுக்கு ஏகப்பட்டபணத்தை அள்ளிக் கொடுத்துள்ளான் வீரப்பன்.
-->


