காதலிக்க மறுத்த கல்லூரி மாணவி மீது "பிளீச்சிங் பவுடர்" வீசிய இளைஞர்

Subscribe to Oneindia Tamil

நாகர்கோவில்:

தன்னைக் காதலிக்க மறுத்த கல்லூரி மாணவியின் மீது பிளீச்சிங் பவுடர் கரைசலை வீசிய இளைஞரைப் போலீசார்தேடி வருகின்றனர். அந்த இளைஞரின் நண்பர் கைது செய்யப்பட்டார்.

கன்னியாகுமரி மாவட்டம் தக்கலை அருகே உள்ள கூட்டமாவுவைச் சேர்ந்த கோபாலன் என்பவரின் மகள்ஜினாகுமாரி (21). இவர் ஆரல்வாய்மொழி அருகே உள்ள ஒரு கல்லூரியில் பி. பார்ம் படித்து வருகிறார்.

இவருடைய பக்கத்து வீட்டைச் சேர்ந்த ஜோன்ஸ் என்பவர் ஜினாகுமாரியைத் தீவிரமாகக் காதலித்து வந்தார்.

ஜினாகுமாரியும் ஜோன்ஸை ஆரம்பத்தில் காதலித்து வந்த போதிலும், பெற்றோர் கண்டித்ததைத் தொடர்ந்துஜோன்ஸுடனான உறவைத் துண்டித்தார்.

ஆனால் தன்னைக் காதலிக்குமாறு ஜினாகுமாரியை ஜோன்ஸ் தொடர்ந்து வற்புறுத்தி வந்ததாகத் தெரிகிறது. இதைஜினாகுமாரி தன் பெற்றோரிடம் கூறவே, அவர்கள் ஊர்ப் பெரியவர்களிடம் புகார் கொடுத்தனர்.

உடனே ஊர்ப் பெரியவர்கள் கூடி, "இனிமேல் ஜினாகுமாரியைப் பார்க்கவோ, பேசவோ கூடாது" என்றுஜோன்ஸிடம் கூறிவிட்டனர்.

இதனால் ஆத்திரமடைந்த ஜோன்ஸ் தன் நண்பர் ஸ்டீபனுடன் சேர்ந்து பிளீச்சிங் கரைசலைத் தயாரித்துவைத்திருந்தார்.

ஜினாகுமாரி கல்லூரிக்குச் சென்று கொண்டிருந்தபோது அவர்கள் இருவரும் சேர்ந்து அவர் மீது பிளீச்சிங் பவுடர்கரைசலை ஊற்றினர்.

இதில் முகம் உள்ளிட்ட சில பகுதிகள் வெந்தன. கடுமையான அரிப்பும் ஏற்பட்டது. இதையடுத்து ஜினாகுமாரிகோட்டார் அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார்.

இதையடுத்து போலீசார் தீவிர விசாரணை நடத்தி ஸ்டீபனைக் கைது செய்தனர். தலைமறைவாகிவிட்ட ஜோன்ஸைத்தேடி வருகின்றனர்.

-->

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+