இன்று எம்.ஜி.ஆர். பிறந்த நாள் விழா
சென்னை:
முன்னாள் முதல்வரும் நடிகருமான எம்.ஜி.ஆரின் 86வது பிறந்தநாள் விழா இன்று தமிழகம் முழுவதும்கொண்டாடப்படுகிறது. இதையொட்டி பிறந்தநாள் விழா மலரை தமிழக முதல்வர் ஜெயலலிதா வெளியிட்டார்.
எம்.ஜி.ஆர். பிறந்தநாளையொட்டி சென்னையில் உள்ள அதிமுக தலைமை அலுவலகத்தில் உள்ள எம்.ஜி.ஆர்.சிலைக்கு ஜெயலலிதா மாலை அணிவித்தார்.
பின்னர் பிறந்தநாள் விழா மலரை அவர் வெளியிட்டார். இவ்விழாவில் அமைச்சர்கள், அதிமுக பிரமுகர்கள்,எம்.எல்.ஏக்கள் ஆகியோர் கலந்து கொண்டனர். அனைவருக்கும் ஜெயலலிதா இனிப்புகள் வழங்கினார்.
இதற்கிடையே சென்னை-தி.நகரில் உள்ள எம்.ஜி.ஆர். நினைவகத்தில் அவருடைய பிறந்தநாள் விழாவைக்கொண்டாடினார் மத்திய கப்பல் போக்குவரத்துத் துறை இணை அமைச்சர் திருநாவுக்கரசர். எம்.ஜி.ஆரின் அதிமுகஅமைச்சரவையில் திருநாவுக்கரசர் இருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
எம்.ஜி.ஆர். நினைவகத்தில் உள்ள அவருடைய சிலைக்கு பா.ஜ.க. நிர்வாகிகளும் இன்று வந்து மாலை அணிவித்துமரியாதை செலுத்தினர்.
திருநாவுக்கரசர் விடுத்துள்ள அறிக்கையில், தமிழகம் முழுவதிலும் உள்ள எம்.ஜி.ஆர். சிலைகளுக்கு பா.ஜ.கவினர்மாலை அணிவிக்குமாறு கோரிக்கை விடுத்துள்ளார்.
அதேபோல் எம்.ஜி.ஆர். ஆட்சியின்போது அமைச்சராக இருந்தவரும், தற்போதைய எம்.ஜி.ஆர். கழகப் பொதுச்செயலாளருமான ஆர்.எம். வீரப்பனும் தி.நகரில் எம்.ஜி.ஆர். நினைவகத்தில் உள்ள அவருடைய சிலைக்கு மாலைஅணிவித்தார்.
எம்.ஜி.ஆர். மருத்துவப் பல்கலைக்கழகத்தில் வைக்கப்பட்டுள்ள அவருடைய சிலைக்கும் பல்வேறு அரசியல்கட்சிப் பிரமுகர்கள் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர்.
இதற்கிடையே மாநிலம் முழுவதிலும் நடைபெற்ற எம்.ஜி.ஆர். பிறந்தநாள் விழா கொண்டாட்டங்களில்,ஏழைகளுக்கு அன்னதானமும் உடைகளும் வழங்கும் நிகழ்ச்சி, மாணவ-மாணவிகளுக்கு இலவச நோட்டுப்புத்தகங்கள் வழங்கும் நிகழ்ச்சி ஆகியவை நடைபெற்றன.
இந்நிலையில் பாண்டிச்சேரியிலும் எம்.ஜி.ஆர். பிறந்தநாள் விழா கொண்டாடப்பட்டது. அம்மாநில முதல்வர்ரங்கசாமி, சபாநாயகர் ராமச்சந்திரன் ஆகியோர் எம்.ஜி.ஆரின் படத்திற்கு மலர் தூவி அஞ்சலி செலுத்தினர்.அம்மாநில அதிமுகவினரும் எம்.ஜி.ஆர். சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர்.
-->
-
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள் -
நான் பார்த்துகிறேன் நண்பா.. உறுதியாக சொன்ன விஜய்.. அஜித் தாய் மறைந்த இரவு.. நடந்தது என்ன? -
பிளாக் அண்ட் ஒயிட் கோட் சூட் அணிவது இதற்காகத் தான்.. ரகசியத்தை போட்டு உடைத்த விஜய்! -
காலியான ராஜ்யசபா எம்பி பதவி! இன்று வேட்புமனு தாக்கல் தொடக்கம்! தவெகவின் முதல் எம்பி யார்?












Click it and Unblock the Notifications