ஜல்லிக்கட்டு: மதுரையில் ஒருவர் பலி- நூற்றுக்கணக்கானோர் காயம்
மதுரை:
உலகப் புகழ் பெற்ற அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டில் காளைகளைப் பிடிக்க முயன்ற 200க்கும் மேற்பட்டஇளைஞர்கள் காயமடைந்தனர்.
மதுரை ஆனையூரில் நடந்த ஜல்லிக்கட்டில் மாடு முட்டியதில் ஒருவர் இறந்தார். 275 பேர் காயமடைந்தனர்.
தமிழர்களின் வீர விளையாட்டான ஜல்லிக்கட்டுக்குப் பெயர் பெற்றது மதுரை மாவட்டம் அலங்காநல்லூர்.பொங்கல் விழாவின் முக்கிய அம்சமான ஜல்லிக்கட்டு மதுரை மாவட்டத்தின் பல்வேறு கிராமங்களிலும் நடந்துவருகிறது. அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டு வெள்ளிக்கிழமை நடந்தது.
பலத்த பாதுகாப்புக்கு மத்தியில் காளைகள் திறந்து விடப்பட்டன. சீறி வந்த காளைகளை அடக்க இளைஞர்கள்கூட்டம் துணிச்சலுடன் எதிர்கொண்டது. இதில் 250க்கும் மேற்பட்ட இளைஞர்களை காளைகள் தூக்கி எறிந்துதுவம்சம் செய்தன.
இதில் பலரது குடல்கள் சரிந்தன. பலருக்கு கொம்புகள் குத்தி படுகாயம் ஏற்பட்டது. காயமடைந்தவர்கள்உடனடியாக மதுரை அரசு ராஜாஜி மருத்துவமனைக்குக் கொண்டு செல்லப்பட்டனர்.
500க்கும் மேற்பட்ட காளைகள் இதில் கலந்து கொண்டன. ஆயிரக்கணக்கான போலீஸார் பாதுகாப்புப் பணியில்ஈடுபட்டிருந்தனர். ஏராளமான வெளிநிாட்டு
நூற்றுக்கணக்கான வெளிநாட்டு சுற்றுலாப் பயணிகளும் ஜல்லிக்கட்டைப் பார்ப்பதற்கு குழுமியிருந்தனர்.
ஆனையூரில் ஒருவர் பலி:
இதற்கிடையே ஆனையூரில் நடந்த ஜல்லிக்கட்டில் பட்டிமேட்டைச் சேர்ந்த மணி என்ற தனியார் நிறுவன வாட்ச்மேன் மாடு முட்டிஇறந்தார்.
ஜல்லிக்கட்டைப் பார்க்கச் சென்ற இவர் மீது மாட்டின் கொம்பு பாய்ந்தது. இதில் அவர் அந்த இடத்திலேயே இறந்தார். மேலும் 275பேர் காயமடைந்தனர். இதில் 25 பேருக்கு மிக பலத்த காயம் ஏற்பட்டது.
தமிழகத்தின் பிற பகுதிகளிலும் நடந்த ஜல்லிக் கட்டுகளில் நூற்றுக்காணவர்கள் காயமடைந்துள்ளனர்.
-->
-
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
“விஜய் இன்னொரு கருணாநிதி என நிரூபித்து வருகிறார்”.. அட்டாக் மோடில் வானதி சீனிவாசன்












Click it and Unblock the Notifications