ஓகேனக்கல் அருகே கார்-பஸ் பயங்கர மோதல்: 6 பேர் பலி
தர்மபுரி:
தர்மபுரி மாவட்டம் ஓகேனக்கல் அருகே சுற்றுலா வந்த டாடா சுமோ காரும், தனியார் பஸ்சும் நேருக்கு நேர்மோதிக் கொண்டதில் காரில் பயணம் செய்த 6 பேர் உடல் நசுங்கி உயிரிழந்தனர்.
கடலூர் மாவட்டம் திருப்பத்தூரைச் சேர்ந்த ஏழு பேர் டாடா சுமோ காரில் ஓகேனக்கலுக்கு சுற்றுலா சென்றனர்.
தர்மபுரி மாவட்டம் நத்தம்பட்டி என்ற கிராமத்திற்கு அருகே வந்து கொண்டிருந்தபோது, எதிரே வந்த தனியார் பஸ்ஒன்று டாடா சுமோ கார் மீது பயங்கரமாக மோதியது.
இந்த மோசமான விபத்தில் காரில் பயணம் செய்த ஐந்து பேர் சம்பவ இடத்திலேயே உடல் நசுங்கி பலியாயினர்.
மேலும் 2 பேர் படுகாயமடைந்து அவர்கள் தர்மபுரி அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர். அவர்களில்ஒருவர் சிகிச்சை பலனளிக்காமல் உயிரிழந்தார்.
காரில் பயணம் செய்தவர்கள் யார் என்பது குறித்து தெரியவில்லை. விபத்து குறித்து போலீசார் விசாரித்துவருகின்றனர்.
-->


