For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

கேரள பகுதிகளை தமிழகத்துடன் இணைக்கலாம்: கிருஷ்ணசாமி யோசனை

By Staff
Google Oneindia Tamil News

கோயம்புத்தூர்:

மூணாறு போன்ற பகுதிகளை தமிழகத்துடன் சேர்க்க வேண்டும் என்று புதிய தமிழகம் கட்சித் தலைவர் டாக்டர்கிருஷ்ணசாமி கூறினார்.

பவானி ஆற்றின் குறுக்கே கேரள அரசு தடுப்பு அணை கட்டி வருவதற்கு அரசியல் கட்சிகள், விவசாயஅமைப்புகள் கடும் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர்.

இந்த நிலையில் கோயம்புத்தூரில் நிருபர்களிடம் டாக்டர் கிருஷ்ணசாமி பேசுகையில்,

தமிழகத்தின் நலனைக் கெடுக்கும் விதத்தில் கேரள அரசு செயல்பட்டு வருகிறது. எனவே தமிழக எல்லையில்அமைந்துள்ள முல்லைப் பெரியாறு பாசனப் பகுதிகளான மூணாறு உள்ளிட்ட பகுதிகளை தமிழகத்துடன் இணைக்கவேண்டும்.

மேலும், தமிழக, கேரள எல்லைப் பகுதிகளை மறு சீரமைக்க வேண்டும். இந்தப் பகுதிகள் உண்மையில்தமிழகத்திற்குச் சொந்தமானவை.

அதேபோல, பவானி ஆறு ஓடும் அட்டப்பாடி உள்ளிட்ட பகுதிகளையும் தமிழகத்துடன் இணைக்க வேண்டும்.

பவானி ஆற்றின் குறுக்கே அணை கட்டக் கூடாது என்பதை வலியுறுத்தி போராட்டம் நடத்த எனது தலைமையில்குழு அமைக்கப்பட்டுள்ளது. அந்தக் குழுவைச் சேர்ந்த பிரதிநிதிகள், வருகிற 22, 23 ஆகிய தேதிகளில் கேரளாசென்று அம்மாநில முதல்வர் ஏ.கே. அந்தோணியைச் சந்திக்கவுள்ளோம்.

பவானி ஆற்றின் குறுக்கே அணை கட்டுவதை நிறுத்த கேரள அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும். தமிழக அரசும்இதைத் தடுக்க உடனடி நடவடிக்கையில் இறங்க வேண்டும். இதில் மெத்தனம் காட்டினால் காவிரி டெல்டாப்பகுதிகளுக்கு ஏற்பட்ட கதியே கோயம்புத்தூர், ஈரோடு மாவட்டங்களுக்கும் ஏற்படும் என்றார் டாக்டர்கிருஷ்ணசாமி.

கேரள எல்லையில் மாபெரும் போராட்டம்:

முன்னதாக, பவானி ஆற்றின் குறுக்கே கேரள அரசு கட்டி வரும் அணைப் பணிகளை நிறுத்தாவிட்டால்,தமிழக-கேரள எல்லையில் விவசாயிகளைத் திரட்டி மாபெரும் போராட்டம் நடத்தப்படும் என்று அனைத்துக்கட்சித் தலைவர்கள் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.

கோயம்புத்தூர், ஈரோடு மாவட்டங்களைச் சேர்ந்த அனைத்துக் கட்சித் தலைவர்கள் அடங்கிய குழுவினர் கேரளமாநிலம் அட்டப்பாடி அருகே உள்ள முக்காலி என்ற இடத்தில் பவானி ஆற்றின் குறுக்கே கட்டப்பட்டு வரும்அணைப் பணிகளை நேரில் பார்வையிட்டனர்.

டாக்டர் கிருஷ்ணசாமி, திக ன்னாள் அமைச்சர் பொங்கலூர் பழனிச்சாமி உள்ளிட்ட அனைத்துக் கட்சியினரும்இதில் இடம் பெற்றிருந்தனர்.

இந்தக் குழுவினர் அணை கட்டப்பட்டு வரும் இடத்தை நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தனர். பின்னர் டாக்டர்கிருஷ்ணசாமி நேற்று நிருபர்களிடம் பேசுகையில்,

இங்கு அணை கட்டப்பட்டால், கோயம்புத்தூர் நகரில் குடிநீர் விநியோகம் முற்றிலும் பாதிக்கப்படும். ஈரோடுமாவட்டத்தில் 200க்கும் மேற்பட்ட கிராமங்களில் தண்ணீரே இல்லாமல் போய் விடும்.

எனவே அணை கட்டும் பணிகளை உடனடியாக கேரள அரசு நிறுத்த வேண்டும். அதற்குரிய முயற்சிகளை தமிழகஅரசும் துரிதமாக மேற்கொள்ள வேண்டும். இல்லாவிட்டால், தமிழக-கேரள எல்லைப்பகுதியில் லட்சக்கணக்கானவிவசாயிகளைத் திரட்டி மாபெரும் போராட்டம் நடத்துவோம்.

மன்னர்காடு என்ற இடத்தில் அமைக்கப்பட்டு வரும் தனியார் குளிர்பான நிறுவனத்திற்கு தண்ணீர் வசதி ஏற்படுத்தித்தருவதற்காகவே இந்த தடுப்பு அணை கட்டும் பணியில் கேரள அரசு ஈடுபட்டுள்ளதாகக் கூறப்படுகிறது.

மேலும், அட்டப்பாடி முதல் ஊட்டி வரை சுற்றுலாப் பிராந்தியமாக மாற்ற கேரள அரசும், தமிழக அரசும் முடிவுசெய்துள்ளதாகவும், அதற்காகவே இந்தப் பகுதியில் தண்ணீரைத் திருப்பி விடும் முயற்சியில் கேரளாஈடுபட்டுள்ளதாகவும், இதற்கு தமிழக அரசு அவ்வளவாகத் தன் எதிர்ப்பை காட்டாமல் இருப்பதாகவும் இப்பகுதிவிவசாயிகள் சந்தேகப்படுகின்றனர் என்றார் டாக்டர் கிருஷ்ணசாமி.

முக்காலிக்கு தலைவர்கள் செல்ல முயன்றபோது கேரள மாநிலத்தைச் சேர்ந்தவர்கள் அவர்களை தடுத்து நிறுத்தினர்.இருப்பினும் போலீஸார் தலையிட்டு தலைவர்கள் செல்ல அனுமதித்தனர்.

󠣰 PQug ٶPlt;/b>

-->

 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X