சாத்தான்குளத்தில் போலீஸாருடன் அதிமுகவினர் அராஜகம்: இளங்கோவன் புகார்
சென்னை:
சாத்தான்குளத்தில் போலீஸாரின் உதவியுடன் காங்கிரஸ் தொண்டர்கள் ஒட்டும் போஸ்டர்கள், விளம்பரங்களைஅழிக்கும் பணியில் அதிமுகவினர் ஈடுபட்டுள்ளதாக காங்கிரஸ் செயல் தலைவர் இளங்கோவன் குற்றம்சாட்டியுள்ளார்.
இதுதொடர்பாக இன்று அவர் விடுத்துள்ள அறிக்கையில்,
போலீஸாரின் உதவியுடன் அதிமுகவினர் சாத்தான்குளத்தில் கண்மூடித்தனமான அராஜகத்தில் ஈடுபட்டுள்ளனர்.
தங்களது ஏவலாளிகளாக போலீஸாரைப் பயன்படுத்திக் கொண்டு காங்கிரஸ் தொண்டர்கள் ஒட்டியுள்ளபோஸ்டர்களை கிழித்தும், விளம்பரங்களை அழித்தும் அட்டூழியம் செய்து வருகின்றனர்.
சைதாப்பேட்டை மற்றும் வாணியம்பாடி ஸ்டைலில் மிரட்டல், உருட்டல் மூலம் சாத்தான்குளத்திலும் வெற்றி பெறஅதிமுக நினைக்கிறது. ஆனால் அது நடக்காது.
அதிமுகவினரின் ஏவலாளிகளாக செயல்பட்டு வரும் காவல்துறையினர், அரசு அதிகாரிகள் மீது கடும் நடவடிக்கைஎடுக்க வேண்டும் என்று தேர்தல் ஆணையத்தைக் கேட்டுக் கொள்வோம்.
மேலும் வாக்குப் பதிவு, ஓட்டு எண்ணிக்கை ஆகியவை நடைபெறும்போது, மத்திய போலீஸ் பாதுகாப்பு கொடுக்கவேண்டும் என்றும் தேர்தல் ஆணையத்தை கோரவுள்ளோம் என்று இளங்கோவன் கூறியுள்ளார்.
காங். வேட்பாளர் 27ம் தேதி அறிவிப்பு:
சாத்தான்குளம் இடைத் தேர்தலில் போட்டியிடவுள்ள காங்கிரஸ் வேட்பாளரின் பெயர் வரும் 27ம் தேதிஅறிவிக்கப்படும் என்று அக்கட்சித் தலைவர் சோ. பாலகிருஷ்ணன் கூறினார்.
சென்னையில் இதுகுறித்து இன்று அவர் நிருபர்களிடம் கூறுகையில்,
சாத்தான்குளம் இடைத் தேர்தலில் போட்டியிட விரும்பும் காங்கிரஸ் தொண்டர்கள் வரும் 22ம் தேதி முதல் 25ம்தேதி விண்ணப்பிக்கலாம்.
இந்த விண்ணப்பங்கள் 26ம் தேதி பரிசீலனை செய்யப்படும். பின்னர் 27 அல்லது 28ம் தேதி வேட்பாளர் பெயரைகாங்கிரஸ் தலைமை அறிவிக்கும்.
"திமுக ஆதரவு தந்தால் அதை ஏற்போம்" என்று நான் கூறவே இல்லை. "தேசிய ஜனநாயகக் கூட்டணியை விட்டுவெளியே வந்தால், அதன் பிறகே கூட்டணி பற்றி யோசிப்போம்" என்றுதான் கூறினேன்.
அதைத்தான் கருணாநிதி தவறாக எடுத்துக் கொண்டு அதற்குக் கடுமையான பதில் அளித்துள்ளார். இது தேவையேஇல்லாதது என்றார் சோ.பா.
-->


