காவிரியில் மூழ்கி 2 சிறுவர்கள் பலி
ஈரோடு:
ஈரோடு அருகே காவிரி ஆற்றில் மூழ்கி 2 சிறுவர்கள் பரிதாபமாக உயிரிழந்தனர்.
ஈரோட்டைச் சேர்ந்த நான்கு சிறுவர்கள் கள்ளுக்கடாமேடு என்ற இடத்தில் ஓடிக் கொண்டிருக்கும் காவிரி ஆற்றில்குளிப்பதற்காக நேற்று மாலை சென்றனர்.
ஆற்றில் நீந்திக் குளித்துக் கொண்டிருந்த சிறுவர்களில் இரண்டு பேர் சிறிது சிறிதாக் கரையிலிருந்து வெகுதொலைவிற்கு ஆற்றினுள் சென்று விட்டனர்.
அவர்களால் திரும்பவும் நீந்திக் கரை சேர முடியவில்லை. அப்படியே ஆற்றில் அடித்துச் செல்லப்பட்டனர்.
இதைக் கண்டதும் மற்ற இரண்டு சிறுவர்களும் ஊருக்குள் சென்று நடந்ததைக் கூறினர். உடனே போலீசாருக்கும்தீயணைப்பு வீரர்களுக்கும் தகவல் கூறப்பட்டது.
உடனே தீயணைப்பு வீரர்கள் விரைந்து வந்து ஆற்றில் அடித்துச் செல்லப்பட்ட சிறுவர்களைத் தேடினார்கள்.அதற்குள் இருட்டி விட்டபோதிலும் தொடர்ந்து அவர்களைத் தேடும் பணி நடைபெற்றது.
இந்நிலையில் இன்று காலை சுமார் மூன்று கி.மீ. தொலைவில் அந்த இரண்டு சிறுவர்களும் பிணமாகத்தான்மீட்கப்பட்டனர்.
இது தொடர்பாக ஈரோடு போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.
-->


