இலங்கை கடற்படை அட்டகாசம்: ராமேஸ்வரம் மீனவர்கள் காலவரையற்ற ஸ்டிரைக்
ராமேஸ்வரம்:
இலங்கை கடற்படையினரால் அடிக்கடி மீனவர்கள் தாக்கப்படுவது, கடத்தப்படுவது ஆகியவற்றைக் கண்டித்துராமேஸ்வரம் பகுதி மீனவர்கள் காலவரையற்ற வேலைநிறுத்தப் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். இதனால் மீன்விலை கிடுகிடுவென உயர்ந்துள்ளது.
ராமேஸ்வரம் பகுதியைச் சேர்ந்த மீனவர்கள் அடிக்கடி நடுக்கடலில் இலங்கை கடற்படையினரால் கடத்தப்பட்டு,சிறை பிடிக்கப்படுவது சாதாரண விஷயமாகி விட்டது. ஏராளமான மீனவர்கள் இலங்கை கடற்படையினரால் சுட்டுக்கொல்லப்பட்டும் உள்ளனர்.
இதைத் தடுக்க மாநில அரசு உடனடி நடவடிக்கை எடுக்கக் கோரி ராமேஸ்வரம் பகுதி மீனவர் சங்கங்கள் சார்பில்நேற்று முன்தினம் முதல் காலவரையற்ற வேலைநிறுத்தப் போராட்டம் நடந்து வருகிறது. தங்களது கோரிக்கைநிறைவேறும் வரை போராட்டம் தொடரும் என்று மீனவர்கள் தெரிவித்துள்ளனர்.
இந்தப் போராட்டத்திற்குப் பிறகும் அரசு செவி சாய்க்காவிட்டால் வரும் 22ம் தேதி ராமேஸ்வரத்தில், அனைத்துமீனவர்களும் திரண்டு கண்டனப் பேரணி மற்றும் தாலுகா அலுவலகம் முன்பு ஆர்ப்பாட்டம் நடத்தத்திட்டமிட்டுள்ளனர்.
அதற்கும் பலன் கிடைக்காவிட்டால் சென்னை முதல் கன்னியாகுமரி வரை தமிழகம் முழுவதிலும் உள்ளமீனவர்களை ராமேஸ்வரத்திற்கு வரவழைத்து மிகப் பெரிய அளவிலான ரயில் மறியல் போராட்டம் நடத்தவும்மீனவர்கள் திட்டமிட்டுள்ளனர்.
மீனவர்கள் ஸ்டிரைக் காரணமாக சுமார் 2,000 நாட்டு மற்றும் விசைப் படகுகள் செயல்படாமல் முடங்கிக்கிடக்கின்றன. சுமார் 10,000 மீனவர்கள் வேலையிழந்துள்ளனர். மீன்பிடித் தொழிலும் முடங்கிக் கிடக்கிறது.இதனால் மீன் விலை கடுமையாக உயர்ந்துள்ளது.
-->












Click it and Unblock the Notifications