பாதயாத்திரை செல்வது போல் நடித்து கஞ்சா கடத்த முயன்ற 7 பேர் கைது
திண்டுக்கல்:
பழனிக்குப் பாதயாத்திரை போவது போல வேடமிட்டு கஞ்சா கடத்த முயன்ற 7 பேரை போலீஸார் கைது செய்தனர்.மேலும் ரூ.5 லட்சம் மதிப்புள்ள கஞ்சா மூட்டைகளும் பறிமுதல் செய்யப்பட்டன.
திண்டுக்கல் மாவட்டம் பழனி அருகே போலீஸார் வாகனச் சோதனையில் ஈடுபட்டிருந்தனர். அப்போது ஒரு கார்நிற்காமல் வேகமாகச் சென்றது.
இதையடுத்து போலீஸார் அந்தக் காரை விரட்டிச் சென்று மடக்கினர். காரை ஓட்டி வந்தவர்களிடம் விசாரணைநடத்தியபோது, காருக்குள் ரூ.3 லட்சம் மதிப்புள்ள கஞ்சா மூட்டைகள் பதுக்கி வைக்கப்பட்டிருந்தது தெரியவந்தது.
இதையடுத்து காரில் இருந்த மகேந்திர வர்மன், சக்திவேல், பொன்ராஜ் உள்ளிட்ட ஐந்து பேரைப் போலீஸார் கைதுசெய்தனர்.
அவர்களிடம் நடத்திய விசாரணையில் கிடைத்த தகவலின்பேரில், கலிங்கப்பட்டி என்ற இடத்தில் இன்னொரு கார்மடக்கப்பட்டு சோதனை செய்யப்பட்டது. அதில் ரூ.2 லட்சம் மதிப்புள்ள கஞ்சா இருந்தது. காரில் இருந்த 3 பேர்கைது செய்யப்பட்டனர்.
பழனிக்கு பாதயாத்திரை செல்வது போல வேடமிட்டு இந்தக் கஞ்சாவை பல்வேறு பகுதிகளுக்கும் கடத்திச் செல்லஇவர்கள் திட்டமிட்டிருந்தது தெரிய வந்தது.
-->












Click it and Unblock the Notifications