மழை வேண்டி பட்டப் பகலில் கிராமப் பெண்கள் நடத்தும் நிர்வாண பூஜை
ஏற்காடு:
ஏற்காடு அருகே உள்ள வெள்ளக்கடை என்ற கிராமத்தில் மழை வேண்டி முழுக்க முழுக்க பெண்களே பங்கு பெறும்நிர்வாண பூஜை ஆண்டுதோறும் நடந்து வருகிறது.
சேலம் மாவட்டம் ஏற்காட்டிலிருந்து 13 கி.மீ. தொலைவில் உள்ளது வெள்ளக்கடை கிராமம்.
பொங்கலையொட்டி ஏதாவது ஒருநாளைத் தேர்ந்தெடுத்து இந்தக் கிராமப் பெண்கள் நிர்வாண பூஜை நடத்துவதுவழக்கம். விவசாயம் செழிக்கவும், நன்றாக மழை பெய்யவும், தொற்று நோய்களிலிருந்து மக்களைக்காப்பற்றவுமே நிர்வாண பூஜை நடத்தப்படுவதாக அந்தக் கிராம மக்கள் கூறுகின்றனர்.
பூஜைக்கான நாள் குறிக்கப்பட்டதும் வெள்ளக்கடையில் உள்ள மூன்று வயதிற்கு மேற்பட்ட ஆண்கள்அனைவருமே அந்த நாளில் கிராமத்தை விட்டு வெளியேற்றப்படுவார்கள்.
பின்னர் கிராமத்தில் உள்ள காளி கோவிலில் முழுக்க முழுக்க பெண்களே கலந்து கொள்ளும் பூஜை நடைபெறும்.பொன்னி என்ற 80 வயது மூதாட்டிதான் பூஜையை முன்னின்று நடத்துவார். அப்போதே பெண்கள் நிர்வாணகோலம் பூண்டுவிடுவார்கள்.
விசேஷமாகத் தயாரிக்கப்பட்ட கேழ்வரகு ரொட்டி மற்றும் பழங்கள் ஆகியவை காளிக்குப் படைக்கப்படுகின்றன.படையல் முடிந்ததுமே பொன்னி நிர்வாண கோலத்தில் நடனம் ஆடியவாறு பெண்களுக்குக் குறி சொல்வார்.
பெண்களின் வயிற்றில் இடித்தவாறுதான் பெண் பூசாரி குறி சொல்லுவார். இடி வாங்கியவுடன் பெண்கள்நிர்வாணக் கோலத்திலேயே ஆடி காளிக்கு நேர்த்திக் கடன் செலுத்துவார்கள்.
சுமார் இரண்டு மணி நேரத்திற்கு இந்த நிர்வாண பூஜையும், ஆட்டங்களும் நடைபெறும். பின்னர் காளிக்குப்படைக்கப்பட்ட உணவை அனைவரும் பகிர்ந்து உண்பார்கள். அத்துடன் பூஜை முடியும்.
இதில் வேடிக்கை என்னவென்றால், இந்தப் பூஜை, ஆட்டம் அனைத்தும் பட்டப் பகலில் நடைபெறும் என்பதுதான்.காலை 10 மணிக்கு இந்தப் பூஜை தொடங்கி நடைபெறும்.
கிராமத்தை விட்டு வெளியேறிய ஆண்கள் மாலை 5 மணிக்கு மேல்தான் ஊருக்குத் திரும்பத் தொடங்குவர்.
பல ஆண்டுகளாக நடந்து வரும் இந்தப் பூஜை கடந்த ஆண்டுதான் வெளி உலகிற்குத் தெரிய வந்தது. கடந்தஆண்டு நடந்த இந்தப் பூஜையைத் தடுக்க போலீசார் எவ்வளவோ முயன்றனர். ஆனால் போலீசாரை ஏமாற்றிவிட்டு பெண்கள் தங்கள் நிர்வாண பூஜையை வெற்றிகரமாக நடத்தி முடித்தனர்.
இந்நிலையில் இந்த ஆண்டு நிர்வாண பூஜை ஜனவரி 19ம் தேதி (இன்று) நடைபெறும் என்றுஅறிவிக்கப்பட்டுள்ளதாகத் தெரிகிறது. இதையடுத்து கடந்த சில நாட்களாகவே சேலம் மாவட்ட போலீசார்ரகசியமாக வெள்ளக்கடை கிராமத்தைக் கண்காணித்து வந்தனர்.
பூஜை தடுத்து நிறுத்தப்பட்டதா என்பது குறித்து இன்று மாலைதான் தெரிய வரும்.
-->


