For Daily Alerts
Just In
வீரப்பன் வேட்டை: ஜெ. திடீர் ஆய்வு
சென்னை:
சந்தனக் கடத்தல் வீரப்பனைப் பிடிப்பது தொடர்பான பணிகள் குறித்து முதல்வர் ஜெயலலிதா திடீர் ஆய்வுமேற்கொண்டார்.
பொங்கல் விடுமுறைக்குப் பின் தலைமைச் செயலகம் வந்த ஜெயலலிதா அமைச்சர்கள், அதிகாரிகளுடன் நடந்தஆலோசனைக் கூட்டத்தில் கலந்து கொண்டார்.
இந்த ஆலோசனைக் கூட்டத்தில் விவாதிக்கப்பட்ட விவரங்கள்:
- தமிழக, கர்நாடக அதிரடிப்படைகள் கூட்டாக மேற்கொண்டு வரும் வீரப்பன் வேட்டை விவரங்கள். அதில் ஏற்பட்டுள்ள முன்னேற்றம்.
- சென்னை நகரின் குடிநீர விநியோக நிலைமை. தண்ணீர் இருப்பு, திடக் கழிவுப் பொருட்களை அகற்றுதல் தொடர்பான திட்டங்கள்.
- சென்னை நகரை பசுமையாக மாற்ற வகை செய்யும் பசுமை நகரம் திட்டம் குறித்த ஆய்வு.
- பிப்ரவரி 23ம் தேதி தொடங்கவுள்ள சட்டசபைக் கூட்டத்தில் ஆளுநர் ஆற்றவுள்ள உரைக்கு இறுதி வடிவம் கொடுப்பது.
இவை குறித்து ஜெயலலிதா ஆய்வு மேற்கொண்டார்.
இந்தக் கூட்டத்தில் அமைச்சர்கள் பொன்னையன், ஜெயக்குமார், செம்மலை, தலைமைச் செயலாளர் லட்சுமிபிரானேஷ், நிதித்துறை செயலாளர் நாராயணன், உள்துறைச் செயலாளர் சையத் முனீர் ஹோதா, தமிழ்நாடு மாசுக்கட்டுப்பாட்டு வாரியத் தலைவர் ஷீலா ராணி சுங்கத், மாநகராட்சி ஆணையாளர் கலைவாணன் ஆகியோர் கலந்துகொண்டனர்.
-->


