For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

மேட்டூர் அணைக்கு வந்தது காவிரி நீர்: ஆனாலும் பயிர்கள் தப்பாது

By Staff
Google Oneindia Tamil News

மேட்டூர்:

கர்நாடகத்தின் கபினி அணையிலிருந்து திறந்து விடப்பட்டுள்ள தண்ணீர் மேட்டூர் அணைக்கு வரத் தொடங்கிஉள்ளது. ஆனாலும் இந்த நீரால் தமிழகத்தில் பயிரிடப்பட்டுள்ள சம்பா பயிர்கள் தப்புவது சந்தேகமே.

காவிரி டெல்டாப் பகுதியில் வாடும் சம்பாப் பயிரைக் காக்க காவிரியில் தண்ணீர் திறக்க வேண்டும் என்றுகர்நாடகத்திடம் தமிழகம் கோரியது. தினமும் வினாடிக்கு 4,500 கன அடி நீர் திறந்து விட வேண்டும் என தமிழகம்கோரியது.

ஆனால், பல நாட்களை வெட்டியாய் கழித்த கர்நாடகம் வேண்டாவெறுப்பாக வினாடிக்கு 2,500 கன அடி நீரைத்திறந்துவிட்டு வருகிறது.

இந்தத் தண்ணீர் தற்போது மேட்டூர் அணைக்கு வந்து சேரத் தொடங்கியுள்ளது. ஞாயிற்றுக்கிழமை காலைஅணைக்கு நீர் வரத்து விநாடிக்கு 636 கன அடியாக இருந்தது.

மாலையில், 1006 கன அடியாக அதிகரித்தது. இன்று மாலைக்குள் நீர் வரத்து மேலும் அதிகரிக்கும் என்றுஎதிர்பார்க்கப்படுகிறது. அப்போதுதான் கர்நாடகம் திறந்து விட்ட தண்ணீரின் உண்மையான அளவு தெரிய வரும்.

கர்நாடக முதல்வர் எஸ்.எம்.கிருஷ்ணா உறுதியளித்தபடி 6 டிஎம்சி தண்ணீரை விட்டால் மேட்டூர் அணையின்நீர்மட்டம் 13 டிஎம்சியாக உயரும். அதில் 7 டிஎம்சி தண்ணீரை பயன்படுத்த முடியாது. அணையின் மதகுகளின்(கேட்கள்) உயரத்துக்கும் கீழ் தான் இந்த 7 டி.எம்.சி. தண்ணீார் இருக்கும். இதனால் மதகைத் திறந்தாலும் நீர்போகாது.

கர்நாடகத்தில் இருந்து வரும் இந்த நீர் மதகுகளின் உயரத்தைத் தொடவே வரும் 25ம் தேதி ஆகிவிடும் என்றுதெரிகிறது. இதனால் 25ம் தேதிக்கு மேல் தான் நீரைத் திறந்துவிட முடியும்.

இந்த நீர் திருச்சியின் கல்லணை வழியாக காவிரி டெல்டாவை அடைய 15 நாட்கள் ஆகும். இதனால் காவிரிப்பாசனப் பகுதிகளுக்கு நீர் செல்ல அடுத்த மாதம் 10ம் தேதி ஆகிவிடும். அதற்குள் சம்பா பயிர்கள் உயிரைக் கையில்பிடித்துக் கொண்டு நிற்குமா என்பது சந்தேகம் தான்.

இந் நிலையில் நேற்று தஞ்சை காவிரி டெல்டா பகுதிகளில் சிறிது மழை பெய்தது. மசளாறு பகுதியில் 8 மில்லிமீட்டரும், சீர்காழி, மயிலாடுதுறை பகுதிகளில் 6 மில்லி மீட்டரும் மழை பெய்தது. ஆனால், இந்த மழைபயிர்களைக் காப்பாற்றும் அளவுக்குப் போதுமானதல்ல என விவசாயிகள் தெரிவித்தனர்.

முதலில் உரிய நேரத்தில் நீரை விட கர்நாடகம் மறுத்தது. பின்னர் காலதாமதமாக நீரை விட முன் வந்தது. அதையும்கூட உடனே விடாமல் கூட்டம், ஆலோசனை எனறு 5 நாட்களை வீணாக்கியது கர்நாடகம். இதனால் இப்போது நீர்வந்தும் கூட பயனில்லாத சூழல் உருவாகியுள்ளது.

கர்நாடக விவசாய சங்கத்தின் திமிர்:

தமிழகம் கடும் வறட்சியில் வாடி வரும் நிலையில் ஏதற்காக 6 டி.எம்.சி. நீரை விட ஒப்புக் கொண்டீர்கள் என்பதை உடனே மக்களுக்குவிளக்க வேண்டும் என கர்நாடக விவசாய சங்கங்கள் அம் மாநில அரசுக்கு கோரியுள்ளன. இது தவிர காவிரி தொடர்பாக 9கேள்விகளையும் கர்நாடக விவசாய சங்கம் எழுப்பியுள்ளது.

 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X