கிராமங்களில் தியானம், யோகாவைப் பரப்ப ஜகி வாசுதேவ் திட்டம்
சென்னை:
தமிழகத்தில் 13,000 கிராமங்களில் ஆழ்நிலை யோகா மற்றும் தியான வகுப்புகளை நடத்த ஈஷா யோகா அமைப்பு திட்டமிட்டுள்ளது.
சென்னை மெரீன கடற்கரையில் நேற்று இரவு இந்த அமைப்பு நடத்திய மகாசத்சங்கக் கூட்டத்தில் ஆயிரக்கணக்கான மக்கள் கூடினர். சத்ருகுஜகி வாசுதேவ் தலைமையில் இந்த தியானக் கூட்டம் நடந்தது.
இந்த அமைப்பு தமிழகத்தில் மிக வேகமாக வளர்ந்து வருகிறது. மெரீன கூட்டத்தில் பேசிய வாசுதேவ் கூறுகையில்,
அடுத்த 3 ஆண்டுகளில் தமிழகத்தின் 13,000 கிராமங்களில் உள்ள லட்சக்கணக்கான மக்களுக்கு தியானமும் யோகாவும் கற்பிக்கப்படும்.இதற்காக தமிழகம் முழுவதும் 3,000 தியான மையங்கள் உருவாக்கப்பட்டும்.
ஒவ்வொரு மனிதனையும் மன அமைதியுடன் வாழச் செய்ய வேண்டும் என்பது தான் இதன் நோக்கம். தினமும் நம் வாழ்க்கை பெரும்அழுத்தமுடையதாக மாறிவிட்டது. ஒவ்வொருவரும் ஏதோ ஒரு வலியுடன் தான் வாழ்கிறோம். எதிர்காலம் குறித்த திட்டங்களிலேயே நாம்தொலைந்து கொண்டிருக்கிறேம்.
இந்த வலி மிகுந்த உலக வாழ்க்கையிலும் கூட மகிழ்ச்சியுடன் வாழ முடியும். அதற்கு யோகாவும் தியானமும் உதவ முடியும்.
மனிதனின் எல்லா உலக தேவைகளையும் அறிவியலும் தொழில்நுட்பமும் கையில் வந்து தந்துவிட்டன. ஆனால், மனிதனின் மனஅமைதிக்குத் தான் வழியில்லாமல் போய்விட்டது.
பலவீனமாகிவிட்ட மனதை பலப்படுத்தவும் அமைதியுடன் வாழவும் யோகா உதவும் என்றார் ஜகி வாசுதேவ்.
-->


