கிரிக்கெட் ஒப்பந்த விவகாரம்: ஐ.சி.சிக்கு கோர்ட் சூடு
டெல்லி:
இந்திய கிரிக்கெட் வீரர்கள் மீது சர்வதேச கிரிக்கெட் கவுன்சில் (ஐ.சி.சி.) நடவடிக்கை எதுவும் எடுத்தால் அதுஏற்பாடு செய்துள்ள பெப்சி, எல்.ஜி., ஹீரோ ஹோன்டா போன்ற நிறுவனங்கள் இந்தியாவில் அந்நிய செலாவணிமூலம் பணம் சம்பாதிப்பதை இந்தியா அனுமதிக்காது என்று டெல்லி உயர் நீதிமன்றம் கூறியது.
அடுத்த மாதம் நடைபெறவுள்ள உலகக் கோப்பை போட்டிகளில் விளையாடும் கிரிக்கெட் அணியினர் விளம்பரம்தொடர்பான தங்கள் ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டால் மட்டுமே விளையா அனுமதிக்கப்படுவார்கள் என்று ஐ.சி.சி.கெடு விதித்திருந்தது.
உலகக் கோப்பை போட்டிகளின்போது ஐ.சி.சி. அனுமதி அளிக்கும் விளம்பரங்களில் மட்டுமே வீரர்கள் தோன்றவேண்டும், வீரர்கள் அணியும் உடைகளில் கூட ஐ.சி.சி. கூறும் விளம்பர பேட்ஜுகள்தான் பயன்படுத்தப்படவேண்டும் என்பது போன்ற கட்டுப்பாடுகள்தான் அந்த ஒப்பந்தத்தில் உள்ளன.
ஆனால் இந்திய வீரர்கள் முதலில் இதற்கு ஒப்புக் கொள்ளவில்லை. இருந்தாலும் சில நிபந்தனைகளுடன் பின்னர்அவர்கள் ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டனர். குறிப்பாக ஐ.சி.சி. அனுமதிக்கும் விளம்பரங்களில் மட்டுமே தோன்றவேண்டும் என்ற ஒப்பந்தத்திற்குக் கட்டுப்பட இந்திய வீரர்கள் உறுதியாக மறுத்து விட்டனர்.
இதற்கிடையே சர்ச்சைக்குரிய இந்த ஒப்பந்தம் தொடர்பாக முன்னாள் இந்திய கிரிக்கெட் அணியின் கேப்டன்கபில்தேவ், முன்னாள் இந்திய கிரிக்கெட் போர்டு தலைவர் சால்வே உள்ளிட்ட சிலர் டெல்லி உயர் நீதிமன்றத்தில்பொது நல வழக்கு தொடர்ந்தனர்.
இவ்வழக்கு இன்று விசாரணைக்கு வந்தது. அப்போதுதான், இந்திய கிரிக்கெட் வீரர்களுக்கு எதிராக ஐ.சி.சி.நடவடிக்கை எதுவும் எடுத்தால் அந்த அமைப்பு அனுமதித்துள்ள பெப்சி, ஹீரோ ஹோன்டா, எல்.ஜி. போன்றநிறுவனங்கள் சர்வதேச செலாவணி மூலம் இந்தியாவில் பணம் சம்பாதிக்க அனுமதிக்கப்பட மாட்டார்கள் என்றுநீதிமன்றம் அறிவித்தது.
அதற்கு இந்திய அரசோ, ரிசர்வ் வங்கியோ அனுமதி அளிக்காது என்றும் நீதிமன்றம் கூறியது.
மேலும் இந்திய வீரர்கள் உலகக் கோப்பை போட்டிகளில் பங்குபெற இயலாமல் போகும் அளவுக்கு ஐ.சி.சி.நடவடிக்கை எடுத்தால் இந்நிறுவனங்கள் தங்கள் பொருட்களை டி.வியில் விளம்பரம் செய்வதற்குத் தடைவிதிக்கப்படும் என்றும் நீதிபதி தேவிந்தர் குப்தா மற்றும் நீதிபதி அஹமது ஆகியோர் கூறினர்.
இந்திய கிரிக்கெட் போர்டு மீது ஐ.சி.சி. நடவடிக்கை எடுத்தாலும், இந்த நிறுவனங்களுக்கு இதே கதிதான் என்றும்நீதிபதிகள் கூறினர்.
இவ்வழக்கு தொடர்பாக ஐ.சி.சி., இந்திய கிரிக்கெட் போர்டு மற்றும் எட்டு விளம்பரதாரர் நிறுவனங்கள் ஆகியவைஅடுத்த ஒரு வாரத்திற்குள் பதில் அளிக்க வேண்டும் என்றும் நீதிபதிகள் உத்தரவிட்டனர்.
இதையடுத்து இவ்வழக்கின் அடுத்தகட்ட விசாரணை வரும் பிப்ரவரி 18ம் தேதிக்கு ஒத்திவைக்கப்பட்டது.
-->


