தலைமைச் செயலகத்தில் மயங்கி விழுந்த அமைச்சர்
சென்னை:
பால்வளத்துறை அமைச்சர் ராமச்சந்திரன் தலைமைச் செயலகத்திலேயே மயங்கி விழுந்தார்.
முதல்வர் ஜெயலலிதா கோட்டை வரும்போதும் வீட்டுக்குப் புறப்படும்போதும் அனைத்து அமைச்சர்களும் வரிசையில் வந்து நிற்பார்கள்.வெயில் அடித்தாலும் மழை பெய்தாலும் இந்த வரிசை காத்து நிற்கும்.
இதே போல ஜெயலலிதா வருகைக்காக அமைச்சர்கள் வரிசையில் நின்றிருந்தனர். பின்னர் ஜெயலலிதா தனது அறைக்குச் சென்றவுடன்அமைச்சர்களும் தங்கள் அறைகளுக்குத் திரும்பினர்.
அப்போது பால்வளத்துறை அமைச்சர் ராமச்சந்திரன் திடீரென மயங்கி சரிந்தார்.
இதனால் பரபரப்பு ஏற்பட்டது. உடனடியாக தலைமைச் செயலக மருத்துவமனையில் இருந்து டாக்டர்கள் விரைந்து வந்து அவரைபரிசோதித்தனர். ரத்த அழுத்தம் அதிகரித்ததால் அவர் மயங்கியதாக டாக்டர்கள் தெரிவித்தனர்.
அவருக்கு முதலுதவி சிகிச்சை அளித்த பின் மருத்துவமனைக்கு டாக்டர்கள் அழைத்துச் சென்றனர். அவர் இப்போது நலமுடன் இருப்பதாகஅமைச்சரின் அலுவலகம் தெரிவித்துள்ளது.
-->


