For Daily Alerts
Just In
உலக கோப்பை போட்டிக்கு பின் ஷேன் வார்னே ஓய்வு
சிட்னி:
உலகக் கோப்பை போட்டிகளுக்குப் பிறகு ஒரு நாள் கிரிக்கெட் போட்டிகளில் இருந்து ஓய்வு பெறப் போவதாக ஆஸ்திரேலிய வீரர் ஷேன்வார்னே அறிவித்துள்ளார்.
தென் ஆப்பிரிக்கா, ஜிம்பாப்வேயில் நடக்கும் போட்டிகளுக்குப் பின் அவர் ஓய்வு பெறுகிறார். 33 வயதான வார்னே இன்று இதனைஅறிவித்தார். வலது தோள்பட்டையில் எலும்பு கீழிறிங்கியதால் அவதிப்பட்டு வரும் அவர் அறுவை சிகிச்சையும் செய்து கொண்டுள்ளார்.
இனி டெஸ்ட் கிரிக்கெட்டில் அதிக தீவிரம் காட்டப் போவதாகவும் அதற்காகவே ஒரு நாள் போட்டிகளில் இருந்து விலகுவதாகவும்அறிவித்தார்.
இதுவரை 191 ஒரு நாள் போட்டிகளில் விளையாடியுள்ள வார்னே 288 விக்கெட்டுகளை வீழ்த்தியுள்ளார். 1999ம் ஆண்டு ஆஸ்திரேலியாஉலகக் கோப்பையை வெல்ல மிக முக்கிய பங்கு வகித்தார்.
107 டெஸ்ட் போட்டிகளில் விளையாடியுள்ள வார்வே 491 விக்கெட்டுகளை வீழ்த்தியுள்ளார்.
-->


