மதுரை உயர் நீதிமன்றக் கிளை: தமிழ்ப் புத்தாண்டு முதல் செயல்படும்
சென்னை:
மதுரையில் அமைக்கப்பட்டு வரும் உயர்நீதிமன்றக் கிளை வருகிற ஏப்ரல் மாதம் 14ம் தேதி முதல் செயல்படத்தொடங்கும் என்று சென்னை உயர்நீதிமன்ற தலைமை நீதிபதி சுபாஷன் ரெட்டி கூறினார்,
தமிழக நீதிபதிகள் சங்கத்தின் வெள்ளிவிழாக் கூட்டம் சென்னை உயர்நீதிமன்ற வளாகத்தில் நடந்தது. இதில்சுபாஷன் ரெட்டி பேசுகையில்,
மதுரை உயர்நீதிமன்றக் கிளைப் பணிகள் வெகுவேகமாக நடந்து வருகின்றன. சில பணிகள் மட்டுமேபாக்கியுள்ளன. ஏப்ரல் 14ம் தேதி தமிழ்ப் புத்தாண்டு முதல் மதுரையில் உயர்நீதிமன்றக் கிளை செயல்படத்தொடங்கும் என்ற நம்பிக்கை உள்ளது.
நீதிபதிகள் மேல் மக்கள் அதிக நம்பிக்கை வைத்துள்ளனர்.அந்த நம்பிக்கைக்குப் பாதகம் ஏற்படாத வகையில்நீதிபதிகள் நடந்து கொள்ள வேண்டும்.
மாவட்ட நீதிபதிகளை கீழ்க் கோர்ட்டுகளுக்கு மாற்றம் செய்வதை நான் அனுமதிக்க மாட்டேன். அது மாவட்டநீதிபதிகளின் செயல்பாட்டையும், மன உறுதியையும் குலைத்து விடும் என்றார் அவர்.
-->












Click it and Unblock the Notifications