மதுரை திமுகவில் கோஷ்டி மோதல் வலுக்கிறது: அழகிரிக்கு கருணாநிதி எச்சரிக்கை
சென்னை:
மதுரை திமுகவில் கட்சிக் கட்டுப்பாட்டை மீறி யார் நடந்தாலும் அவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும்என்று திமுக தலைவர் கருணாநிதி எச்சரிக்கை விடுத்துள்ளார்.
திமுகவில் அத்தனை மாவட்டங்களிலும் கோஷ்டி மோதல்கள் உள்ளுக்குள்ளேயே இருந்தாலும், மதுரை திமுகவில்எப்போதுமே அடிதடி, கலாட்டா என்ற அளவில் அப்பட்டமாகவே தெரியும்.
கருணாநிதியின் மகன்களான ஸ்டாலின் மற்றும் மதுரையில் குடியிருக்கும் அழகிரி ஆகியோருக்கிடையேஇருந்து வரும் போட்டி காரணமாக அவர்களது ஆதரவாளர்கள் அடிக்கடி மோதிக்கொள்வது சாதாரணவிஷயமாகிப் போய் விட்டது. மதுரை கோஷ்டிப் பூசலைத் தீர்க்க கருணாநிதி படாத பாடு பட்டு வருகிறார்.
இந்நிலையில் சமீபத்தில் திமுக சார்பில் நடந்த வீரவணக்கம் நாள் நிகழ்ச்சியிலும் கோஷ்டிப் பூசல் வெடித்தது. இதைகருணாநிதி வன்மையாகக் கண்டித்துள்ளார். இது தொடர்பாக அவர் விடுத்துள்ள அறிக்கை:
மதுரை நகர் திமுகவில் தனிப்பட்ட கோப தாபங்களாலும், மன மாச்சரியங்களாலும் தொடர்ந்து நிலவி வந்தபிரச்சினைகள் குறித்து விவாதித்து, நல்ல முடிவெடுக்க நானும், பேராசிரியர் அன்பழகனும், பொருளாளர் ஆற்காடுவீராசாமியும் முடிவெடுத்து கடந்த 19ம் தேதி இரு தரப்பினரையும் வரவழைத்து அனைவரின் கருத்துக்களையும்அறிந்தோம்.
அதன் அடிப்படையில், இனிமேல் இரு தரப்பினரும் ஒருங்கிணைந்து செயல்பட்டு கட்சிப் பணியாற்றிடவும், கழகஒற்றுமையைக் காத்திடவும் சில வழிமுறைகளை வகுத்து அவற்றை நிறைவேற்ற இரு தரப்பினரையும் சேர்ந்த 7 பேர்கொண்ட ஆலோசனைக் குழு அமைக்கப்பட்டது. அதன் அமைப்பாளராக வேலுச்சாமி நியமிக்கப்பட்டார்.
இதற்கு மேலும் பிரச்சினை எழுந்தால் தலைமைக் கழகம் தலையிட்டு நடவடிக்கை எடுக்கும் என்றுஅறிவுறுத்தப்பட்டது.
இந்நிலையில் திமுக மாணவர் அணி சார்பில் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த வீரவணக்க நாள் நிகழ்ச்சி தொடர்பாகஒரே மனதாக எடுக்கப்பட்ட முடிவுகள் மீறப்பட்டுள்ளன. எனவே மாணவர் அணி அமைப்பாளர் கிரம்மர் சுரேஷ்மீது கட்சி விதிகளின்படி பொதுச் செயலாளர் நடவடிக்கை எடுத்துள்ளார்.
சுரேஷின் கட்டுப்பாடற்ற செயலுக்கு மாநகர மாவட்ட கழக நிர்வாகம் துணை போயுள்ளது என்பதை அறிகிறேன்.எனவே ஏழு பேர் கொண்ட குழுவில், யார் தவறு செய்திருந்தாலும் அவர்கள் மீதும் ஒழுங்கு நடவடிக்கைஎடுக்கப்படும் என்று தெரிவித்துக் கொள்கிறேன்.
கட்சிக்கு கட்டுப்பாடும், ஒழுக்கமும், ஒற்றுமையும்தான் முக்கியம். அதற்கு ஊறு விளைவிப்பவர் யாராகஇருந்தாலும், எவ்வளவு பெரிய பொறுப்பில் இருந்தாலும் நடவடிக்கை எடுக்க கழகத் தலைமை தயங்காது.
இப்போதுள்ள எனது மன நிலையில், மதுரை திமுகவினருக்கு இதையை இறுதி எச்சரிக்கையாக தெரிவித்துக்கொள்ள விரும்புகிறேன் என்று கூறியுள்ளார் கருணாநிதி.
கருணாநிதி குறிப்பிட்டுள்ள கிரம்மர் சுரேஷ் என்பவர் அழகிரியின் தீவிர ஆதரவாளர் என்பது குறிப்பிடத்தக்கது.
உண்மையில், கருணாநிதி விடுத்துள்ள இறுதி எச்சரிக்கை அழகிரிக்குத்தான். இனிமேலும் அழகிரியின்செயல்களைப் பொறுத்துக் கொள்ள கருணாநதி தயாராக இல்லை என்பதையே இது காட்டுவதாக திமுகவட்டாரத்தில் பேசப்படுகிறது.
-->












Click it and Unblock the Notifications