தலித்துகளை இழிவுபடுத்திய விவகாரம்: சங்கராச்சாரியாரை கண்டித்து காஞ்சியில் போராட்டம்
காஞ்சிபுரம்:
தலித்துகளை இழிவாகப் பேசியது தொடர்பாக காஞ்சி சங்கராச்சாரியாரான ஸ்ரீஜெயேந்திர சுவாமிகளைக்கண்டித்து புதிய தமிழகம் மற்றும் பெரியார் திராவிடர் கழகம் ஆகிய கட்சிகள் காஞ்சிபுரத்தில் ஊர்வலம் மற்றும்போராட்டம் நடத்தின.
காஞ்சி சங்கராச்சாரியார் தலித்துகளைத் தரக் குறைவாகவும், மிகவும் இழிவாகவும் பேசியதாகக் குற்றச்சாட்டுக்கள்எழுந்துள்ளன. இது தொடர்பாக சில வழக்குகளும் தாக்கல் செய்யப்பட்டுள்ளது.
காஞ்சி மடத்திற்குச் சொந்தமான பள்ளிகளிலும் தலித்துகளிடத்தில் பாரபட்சம் காட்டப்படுவதாகப் புகார்கள்வந்துள்ளன. இந்தப் பள்ளிகளில் பிராமணர்களுக்கு ஒரு விடுதியும், பிராமணரல்லாத பிற மாணவர்களுக்கு ஒருவிடுதியும் நடத்தப்பட்டு வருவதாகக் கூறப்படுகிறது. ஆனால், இதை சங்கர மடம் மறுத்துள்ளது.
இந்நிலையில் தலித்துகளை அவமானப்படுத்தி காஞ்சி சங்கராச்சாரியார் பேசுவதை நிறுத்திக் கொள்ள வேண்டும்என்று கூறி புதிய தமிழகம், பெரியார் திராவிடர் கழகம் ஆகிய கட்சிகள் காஞ்சிபுரத்தில் போராட்ட ஊர்வலம்நடத்தின.
இதில் ஆயிரக்கணக்கான தலித்கள் கலந்து கொண்டனர். சங்கராச்சாரியாருக்கு எதிராக கோஷங்கள் எழுப்பினர்.
பின்னர் இந்தக் கட்சிகள் சார்பில் போராட்டமும் நடத்தப்பட்டது. புதிய தமிழகம் தலைவர் டாக்டர் கிருஷ்ணசாமி,பெரியார் திராவிடர் கழகப் பொதுச் செயலாளர் ராஜேந்திரன் உள்ளிட்டவர்கள் இந்தப் போராட்டத்தில் கலந்துகொண்டனர்.
-->


