ஜிம்பாப்பேயில் போட்டி நடத்த இங்கிலாந்து எதிர்ப்பு

Subscribe to Oneindia Tamil

லண்டன்:

உலகக் கோப்பை கிரிக்கெட் போட்டிகளை ஜிம்பாப்வேயில் இருந்து மாற்ற வேண்டும் என்ற இங்கிலாந்து நாட்டின்கோரிக்கையை சர்வதேச கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியம் நிராகரித்துவிட்டது.

இந் நிலையில் ஜிம்பாப்வேயில் போட்டிகள் நடத்த நியூசிலாந்தும் எதிர்ப்புத் தெரிவித்துள்ளது.

தென் ஆப்பிரிக்கா, ஜிம்பாப்வே, கென்யாவில் ஆகிய நாடுகளில் நடக்க உள்ள இந்தப் போட்டிகள் வரும் பிப்ரவரி 8ம் தேதிதொடங்குகின்றன.

ஜிம்பாப்வேயில் உள்ள ராபர்ட் முகாபேயின் அரசு வெள்ளையர்களுக்கு எதிராக பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது.வெள்ளையர்களிடம் இருந்து நிலங்களை எல்லாம் பறித்து கருப்பர்களிடம் தந்து வருகிறது. இதனால் அந்த நாட்டின் மீதுஇங்கிலாந்து உள்ளிட்ட மேற்கத்திய நாடுகள் கோபத்தில் உள்ளன.

இதையடுத்து ஜிம்பாப்வேயில் எங்களுக்கு பாதுகாப்பு இருக்காது. எனவே போட்டிகளை அங்கிருந்து மாற்ற வேண்டும் எனஇங்கிலாந்து கோரியது. ஆனால், இதை சர்வதேச கிரிக்கெட் வாரியத்தின் தலைமை நிர்வாகியான மால்கம் ஸ்பீட் ஏற்கமறுத்துவிட்டார்.

அங்குள்ள பாதுகாப்பு நிலைமை குறித்து தனியார் அமைப்புகள் மூலம் ஆய்வு நடத்தப்பட்டுள்ளது. ஆய்வில் போட்டிகளைநல்லமுறையில் நடத்த முடியும் என்று தெரியவந்துள்ளது. எனவே, ஜிம்பாப்வேயில் இருந்து போட்டிகளை மாற்ற முடியாது.அங்கு நிலைமை மோசமானால் அது குறித்து யோசிப்போம் என்றார்.

பிப்ரவரி 13ம் தேதி அந் நாட்டின் தலைவர் ஹராரேயில் ஜிம்பாப்வே அணியை எதிர்த்து இங்கிலாந்து ஆட வேண்டியுள்ளது.

நியூசிலாந்தும் முரண்டு:இந் நிலையில் ஜிம்பாப்வேயில் போட்டிகள் நடத்த நியூசிலாந்தும் எதிர்ப்புத் தெரிவித்துள்ளது.

தென் ஆப்பிரிக்கா, ஜிம்பாப்வே, கென்யாவில் ஆகிய நாடுகளில் நடக்க உள்ள இந்தப் போட்டிகள் வரும் பிப்ரவரி 8ம் தேதிதொடங்குகின்றன.

ஜிம்பாப்வேயில் உள்ள ராபர்ட் முகாபேயின் அரசு வெள்ளையர்களுக்கு எதிராக பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது.வெள்ளையர்களிடம் இருந்து நிலங்களை எல்லாம் பறித்து கருப்பர்களிடம் தந்து வருகிறது. இதனால் அந்த நாட்டின் மீதுஇங்கிலாந்து உள்ளிட்ட மேற்கத்திய நாடுகள் கோபத்தில் உள்ளன.

இதையடுத்து ஜிம்பாப்வேயில் எங்களுக்கு பாதுகாப்பு இருக்காது. எனவே போட்டிகளை அங்கிருந்து மாற்ற வேண்டும் எனஇங்கிலாந்து கோரியது. ஆனால், இதை சர்வதேச கிரிக்கெட் வாரியத்தின் தலைமை நிர்வாகியான மால்கம் ஸ்பீட் ஏற்கமறுத்துவிட்டார்.

அங்குள்ள பாதுகாப்பு நிலைமை குறித்து தனியார் அமைப்புகள் மூலம் ஆய்வு நடத்தப்பட்டுள்ளது. ஆய்வில் போட்டிகளைநல்லமுறையில் நடத்த முடியும் என்று தெரியவந்துள்ளது. எனவே, ஜிம்பாப்வேயில் இருந்து போட்டிகளை மாற்ற முடியாது.அங்கு நிலைமை மோசமானால் அது குறித்து யோசிப்போம் என்றார்.

பிப்ரவரி 13ம் தேதி அந் நாட்டின் தலைவர் ஹராரேயில் ஜிம்பாப்வே அணியை எதிர்த்து இங்கிலாந்து ஆட வேண்டியுள்ளது.

நியூசிலாந்தும் முரண்டு:

இதற்கிடையே இங்கிலாந்துக்கு ஆதரவாக நியூசிலாந்தும் ஜிம்பாப்வேக்கு எதிராக குரல் எழுப்பியுள்ளது.

நியூசிலாந்தி கிரிக்கெட் வாரிய தலைவர் மார்டின் ஸ்னேட்டன் கூறுகையில், கென்யாவில் உள்ள அல் கொய்தா உள்ளிட்டதீவிரவாத அமைப்புகள் மேற்கத்திய நாடுகளைச் சேர்ந்தவர்களைத் தாக்கலாம் என்று தெரிகிறது. அங்கு விளையாடும் எங்கள்அணியும் தாக்கப்படலாம். இதனால் போட்டியை கென்யா- ஜிம்பாப்வேயில் இருந்து மாற்ற வேண்டும் என்றார்.

இந்தக் கோரிக்கை குறித்து சர்வதேச கிரிக்கெட் வாரியம் இன்று விவாதிக்க உள்ளது.

இப்போதுள்ள திட்டப்படி பிப்ரவரி 21ம் தேதி கென்யாவுக்கு எதிராகவும் 24ம் தேதி இலங்கைக்கு எதிராகவும் கென்ய தலைநகர்நைரோபியில் நியூசிலாந்து விளையாடியாக வேண்டும்.

-->

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+