மும்பையில் அடுத்தடுத்து குண்டுகள் வெடிப்பு

Subscribe to Oneindia Tamil

மும்பை:

மும்பையில் நள்ளரவில் அடுத்தடுத்து இரு குண்டு வெடிப்புகள் நடந்ததையடுத்து அங்கு பெரும் பரபரப்பு நிலவுகிறது. இந்தகுண்டு வெடிப்புகளில் 30 பேர் காயமடைந்துள்ளனர்.

இன்று பிரதமர் வாஜ்பாய் மும்பை வர உள்ள நிலையில் இச் சம்பவங்கள் நடந்திருப்பதால் நகரில் பாதுகாப்புபலப்படுத்தப்பட்டுள்ளது.

நேற்றிரவு விலே பார்வே என்ற இடத்தில் தீனாநாத் சபாாகிரஹா என்ற பகுதியில் ஒரு வர்த்தக வளாரத்தில் குண்டு வெடித்து 30பேர் காயமடைந்தனர். இதையடுத்து அங்கு வெடிகுண்டு நிபுணர்கள் விரைந்தனர்.

நகரின் பல பகுதிகளிலும் அவர்கள் சோதனை நடத்தியபோது எம்.ஜி. ரோட்டில் ஒரு புக்கதக் கடையின் வெளியே இன்னொருஇடத்தில் ஒரு டைம் பாம் இருந்தது.

அதைச் செயலழிக்க செய்ய முடியாததால் பொது மக்களை வெளியேற்றிவிட்டு அதை போலீசாரே வெடிக்க வைத்தனர். இதில்யாரும் காயமடையவில்லை. இந்த குண்டு நள்ளிரவு 1 மணிக்கு வெடித்தது.

பிரதமர் வருகையையொட்டி பெரும் தாக்குதல் ஏதும் நடத்தத் திட்டமிடப்பட்டிருக்கலாம் என மத்திய அரசு கருதுகிறது. இதனால்இந்த குண்டு வெடிப்புகளையடுத்து மத்திய கமாண்டே படையினர் மும்பை விரைந்தனர். அவர்கள் இந்த வெடிகுண்டுகள் குறித்துசோதனை நடத்தி வருகின்றனர்.

-->

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+