For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

14வது விவசாயி சாவு: தமிழகத்தில் பட்டினிச் சாவு இல்லை என்கிறார் ஜெ

By Staff
Google Oneindia Tamil News

சென்னை:

சம்பா பயிர் காயந்ததையடுத்து தமிழகத்தில் 14வது விவசாயி இன்று காலை இறந்தார்.

ஆனால், தமிழகத்தில் பட்டினிச் சாவுகளே நடக்கவில்லை என்று முதல்வர் ஜெயலலிதா சட்டசபையில் தெரிவித்தார்.

திமுக உறுப்பினரும் முன்னாள் அமைச்சருமான பொன்முடி இதுதொடர்பாக கேள்வி எழுப்பிப் பேசுகையில்,தமிழகத்தில் இதுவரை 13 பேர் பட்டினியால் இறந்துள்ளனர். அரசின் அலட்சியப் போக்கு காரணமாகவேபட்டினிச் சாவுகள் அதிகரித்து வருகின்றன என்றார்.

அப்போது குறுக்கிட்ட ஜெயலலிதா, தமிழகத்தில் இதுவரை பட்டினியால் யாரும் சாகவில்லை. கடன் தொல்லை,குடும்பத் தகராறு, மாரடைப்பு மற்றும் பல்வேறு நோய்கள் காரணமாகவே அவர்கள் இறந்துள்ளனர்.

அப்போது பொன்முடி குறுக்கிட்டு, "பட்டினிச் சாவுகளுக்கு என்னிடம் ஆதாரம் உள்ளது. விவசாயி வீரையன்முதல்வருக்கு எழுதி வைத்துள்ள கடிதமே முக்கிய ஆதாரம். தஞ்சாவூர் மாவட்ட கலெக்டரும் இதற்குசான்றளித்துள்ளார்.

மேலும் இந்தக் கடிதத்தைக் கைப்பற்றுவதற்காக மன்னார்குடி கம்யூனிஸ்ட் எம்.எல்.ஏவின் வீட்டில் போலீசார்நள்ளிரவில் புகுந்து அராஜகம் செய்துள்ளனர். இதற்கு முதல்வர் என்ன பதில் சொல்லப் போகிறார்?" என்றார்.

அப்போது மீண்டும் குறுக்கிட்டுப் பேசிய முதல்வர், "பட்டினியால் யாரும் சாகவில்லை என்பதற்கு என்னிடமும்ஆதாரம் உள்ளது. ஆனால் அது தற்போது என் கையில் இல்லை" என்றார்.

இதையடுத்து திமுக உறுப்பினர்கள் ஜெயலலிதாவைப் பார்த்து நக்கலாக சிரித்தனர். இதற்கு அதிமுகஎம்.எல்.ஏக்களும் அமைச்சர்களும் எதிர்ப்பு தெரிவிக்க இரு தரப்பினரும் ஒருவரை ஒருவர் நல் வார்த்தைகளால்திட்டிக் கொண்டனர்.

ஆளும் கட்சியினரும் எதிர்க் கட்சியினரும் மாறி மாறி சத்தம் போட்டுப் பேசவே, அவையில் கூச்சல், குழப்பம்நிலவியது. சலசலப்பு அடங்க வெகு நேரமானது.

பவானி அணை பிரச்சனை:

பின்னர் கேரள அரசு பவானி ஆற்றின் குறுக்கே அணை கட்டுவது தொடர்பாக பொன்முடி கேள்வி எழுப்பினார்.

அதற்குப் பதில் அளித்த முதல்வர், பவானி ஆற்றின் குறுக்கே கேரள அரசு அணை கட்டுவது தொடர்பாக காவிரிநடுவர் மன்றத்தில் முறையிட்டுள்ளோம். அணை கட்டுவதை தடுத்து நிறுத்தத் தேவையான அனைத்துநடவடிக்கைளும் மேற்கொள்ளப்பட்டுள்ளன என்றார்.

கிருஷ்ணா நீர் விவகாரம்:

அதேபோல, சென்னை நகருக்கு கிருஷ்ணா நீரை விடுவிப்பது தொடர்பாகவும் இன்று ஜெயலலிதாவுக்கும்பொன்முடிக்கும் இடையே காராசாரமான விவாதம் நடைபெற்றது.

பொன்முடி கூறுகையில், திமுக தலைவர் கருணாநிதியும் ஆந்திர முதல்வர் சந்திரபாபு நாயுடுவும் சேர்ந்துகிருஷ்ணாவில் நீர் அனுப்பாத நிலையிலேயே அனுப்பப்பட்டதாகக் கூறி சென்னை மக்களை ஏமாற்றி விட்டனர்என்று இதே சட்டசபையில்தான் ஜெயலலிதா கூறினார்.

ஆனால் சமீபத்தில் எந்த ஒரு அதிகாரியும் இல்லாமல் நாயுடுவுடன் ஜெயலலிதா தனியாகவே கிருஷ்ணா நீர்குறித்துப் பேசியுள்ளதாகக் கூறிக் கொள்கிறார் என்றார் பொன்முடி.

அப்போது குறுக்கிட்ட ஜெயலலிதா பொன்முடியைப் பார்த்து, தெலுங்கு-கங்கை திட்டத்தைப் பற்றி நாயுடுவுக்குநன்றாகத் தெரியும். எனக்கும் மிக நன்றாகவே தெரியும். மேலும் நாங்கள் பேசியபோது, கிருஷ்ணா நீர் குறித்துவிரைவில் கூட்டம் நடத்த வேண்டும் என்றுதான் நான் அவரிடம் கேட்டுக் கொண்டேன்.

அதன்படி கடந்த 10ம் தேதி இரு மாநில தலைமைச் செயலாளர்களும் கலந்து கொண்ட கூட்டம் ஹைதராபாத்தில்நடந்தது. உரிய நேரத்தில் கிருஷ்ணா நீர் சென்னை வந்து சேரும்.

பழைய பிரச்சனைகளையெல்லாம் நீங்கள் தோண்டிக் கொண்டிருக்க வேண்டிய அவசியமில்லை. இதனால்தமிழகத்திற்கும் ஆந்திராவுக்கும் இடையிலான உறவைக் கெடுக்க நீங்கள் நினைத்தால் அது பலிக்காது என்றுபொன்முடியை நேருக்கு நேராகப் பார்த்துக் கூறினார் ஜெயலலிதா.

அப்போது துரைமுருகன் எழுந்து பேசுகையில், இரு மாநிலங்களுக்கும் இடையிலான உறவை சீர்குலைக்கவேண்டும் என்ற எண்ணமெல்லாம் திமுகவுக்கு இல்லை.

ஆனால் இதே உறவு முறையை கர்நாடக அரசிடமும் தமிழக அரசு வைத்துக் கொண்டிருந்தால் காவிரிப் பிரச்சனைஎழுந்திருக்குமா? சம்பா பயிர்கள் கருகியிருக்குமா? விவசாயிகள் இறந்திருப்பார்களா என்று கேட்டார்துரைமுருகன்.

தஞ்சையில் மேலும் ஒரு விவசாயி சாவு:

இந் நிலையில் தஞ்சாவூர் பகுதியில் வாடிய பயிரைப் பார்த்த அதிர்ச்சியில் மேலும் ஒரு விவசாயி மாரடைப்புஏற்பட்டு மரணமடைந்தார்.

கடன் வாங்கி விவசாயம் செய்த விவசாயிகளில் சிலர் தற்கொலை செய்து கொண்டனர். மேலும் சிலர் சரிவரஉண்ணாமலும் அதிர்ச்சியிலும் மரணமடைந்துள்ளனர். இதுவரை 13 பேர் வரை இறந்துள்ளனர்.

இந்நிலையில் இன்று அதிகாலை ஒரு விவசாயி மரணமடைந்தார். தஞ்சை மாவட்டம் திருக்காட்டுப்பள்ளி அருகேஉள்ள களிமங்கலம் கிராமத்தைச் சேர்ந்த விவசாயி ஜோசப். இவர் தனது வயலில் கடன் வாங்கி பயிரிட்டிருந்தார்.ஆனால் போதிய தண்ணீர் இல்லாமல் பயிர்கள் கருகி விட்டன.

இன்று அதிகாலை வயலுக்குச் சென்றவர், வாடிய பயிரைப் பார்த்து மிகவும் மனம் நொந்த நிலையில் வீட்டிற்குத்திரும்பினார். ஆனால் வீட்டு வாசலிலேயே ஜோசப் திடீரென்று மயங்கி விழுந்தார். மாரடைப்பினால் துடிதுடித்தஅவர் அடுத்த சில நிமிடங்களிலேயே மரணமடைந்தார். இறந்த விவசாயி ஜோசப்புக்கு 55 வயது ஆகிறது.அவருக்கு மனைவியும் 3 மகள்களும் உள்ளனர்.

இதையடுத்து தமிழக காவிரி டெல்டா பகுதிகளில் பலியான விவசாயிகளின் எண்ணிக்கை 14ஆகஅதிகரித்துள்ளது.

uĀ gm] x: J : QҸ zv SŨlt;/b>

-->

 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X