போர்வெல்கள் தோண்டத் தடை: சட்டசபையில் மசோதா தாக்கல்
சென்னை:
தமிழகத்தில் வீடுகள் தவிர மற்ற இடங்களில் ஆழ்குழாய் கிணறு தோண்டுவதற்குத் தடை விதித்து அரசு சமீபத்தில்கொண்டுவந்த சட்ட மசோதா இன்று சட்டசபையில் தாக்கல் செய்யப்பட்டது.
தமிழகத்தில் பெரும் வறட்சி நிலவுகிறது. கடந்த காலங்களில் தொடர்ந்து மரங்களை வெட்டி வந்ததாலும், நிலத்தடிநீரை வீணாடிக்கியதும் தான் இது போன்ற மிகக் கடுமையான வறட்சிக்குக் காரணம் என ஆய்வாளர்கள்தெரிவித்துள்ளனர்.
இருக்கும் நிலத்தடி நீரையும் உரிய முறையில் பாதுகாக்காவிட்டால் தமிழகமே பொட்டல் காடாக மாறும் அபாயம்இருப்பதாகவும் அரசுக்கு எச்சரிக்கை விடுத்துள்ளனர். இதனால் நிலத்தடி நீரைப் பாதுகாக்கும் வகையில்தமிழகத்தில் இனி வீடுகள் தவிர ஆழ்குழாய் கிணறு தோண்டுவதற்குத் தடை விதிக்கப்பட்டுள்ளது.
இதனால் பெரிய அளவில் கிணறுகளை வெட்டியும், 500, 600 அடிக்கு போரிங் போட்டு நீரை எடுத்து விற்றுவருபவர்களும் பெரிய விவசாயக் கிணறுகளை தோண்டுபவர்களும் பாதிக்கப்படுவார்கள்.
ஆழ்குழாய்க் கிணறுகளுக்கு தடை விதிக்கும் உத்தரவு கடந்த 14ம் தேதி பிறப்பிக்கப்பட்டது. இந் நிலையில்பொதுப்பணித் துறை அமைச்சர் பன்னீர்செல்வம் இன்று இது தொடர்பான சட்ட மசோதாவை சட்டசபையில் தாக்கல்செய்தார்.
இந்தச் சட்டத்தின்படி, வீட்டு உபயோகத்திற்குத் தவிர மற்ற இடங்களில் ஆழ்குழாய் கிணறு தோண்டுபவர்கள் மீதுகடும் நடவடிக்கை எடுக்கப்படும்.
இந்தச் சட்டத்தை மீறுபவர்களுக்கு முதல் முறை ரூ.1,000 அபராதம் விதிக்கப்படும். இரண்டாவது முறை இந்தச்சட்டத்தை மீறினால் ரூ.2,000 அபராதமும், இப்படியே ஒவ்வொரு முறையும் மீறினால் ரூ.2,000 அபராதம்விதிக்கவும் இந்தச் சட்டம் வழி செய்கிறது.
பிளாஸ்டிக் மீதான தடை விலகுகிறது?
இதற்கிடையே பிளாஸ்டிக் பொருள்களை உபயோகிப்பதற்கு விதிக்கப்பட்டிருந்த தடையை தமிழக அரசுவிரைவில் விலக்கிக் கொள்ளும் என்று தெரிகிறது.
பிளாஸ்டிக் பொருள்களைப் பயன்படுத்தக் கூடாது என்று கூறி கடந்த ஆண்டு தமிழக அரசு ஒரு தடைச் சட்டம்கொண்டு வந்தது. ஆனால் இந்தச் சட்டத்திற்கு பலத்த எதிர்ப்பு கிளம்பியது.
இதையடுத்து இது தொடர்பாக ஆராய்வதற்காக சிறப்புக் குழு ஒன்றை அரசு நியமித்தது. பிளாஸ்டிக்பயன்படுத்துவதால் ஏற்படும் நன்மை, தீமைகளை ஆய்வு செய்த இந்தக் குழுவினர் சமீபத்தில் தங்கள்அறிக்கையை அரசிடம் சமர்ப்பித்தனர்.
பிளாஸ்டிக் பொருள்களைப் பயன்படுத்தலாம் என்றும், சுற்றுச் சூழலுக்குக் கேடு விளைவிக்கும் பிளாஸ்டிக்பொருள்களை மட்டும் தடை செய்வதற்கான சட்டத்தைக் கொண்டு வரலாம் என்றும் அந்த அறிக்கையில்கூறப்பட்டிருந்தது.
அந்த ஆய்வு அறிக்கை இன்று சட்டசபையில் தாக்கல் செய்யப்பட்டது.
அதில், தற்போது அமலில் உள்ள பிளாஸ்டிக் பொருள்கள் மீதான தடையைத் தமிழக அரசு திரும்பப் பெற்றுக்கொள்ள வேண்டும் என்றும் பரிந்துரை செய்யப்பட்டுள்ளது.
இதனல் பிளாஸ்டிக் பொருள்கள் மீதான தடையை தமிழக அரசு விரைவில் திரும்பப் பெற்றுக் கொள்ளும் என்றுதெரிகிறது.


