For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

சாத்தான்குளம் தொகுதியில் பா.ஜ.க. போட்டியில்லை: அதிமுகவுக்கு மறைமுக ஆதரவு?

By Staff
Google Oneindia Tamil News

டெல்லி:

சாத்தான்குளம் தொகுதியில் போட்டியிடப் போவதில்லை என பா.ஜ.க. அறிவித்துள்ளது. அதிமுகவுக்கு ஆதரவாகவே பா.ஜ.க.இந்த முடிவை எடுத்துள்ளதாகத் தெரிகிறது.

இத் தொகுதியில் பிப்ரவரி மாதம் 26ம் தேதி தேர்தல் நடக்கிறது. இங்கு போட்டியிடுவோம் என அதிமுகவும் காங்கிரசும்அறிவித்துவிட்டன. போட்டியிடப் போவதாக பா.ஜ.கவும் அறிவித்தது.

ஆனால், பா.ஜ.க. கடைசி நேரத்தில் போட்டியிடாமல் விலகிக் கொண்டு அதிமுகவை ஆதரிக்கலாம் என முன்பே திமுககணித்துவிட்டது. இந் நிலையில் திமுகவும் போட்டியிட்டால் தேவையில்லாமல் காங்கிரஸ் வாக்குகள் தான் சிதைந்து அதுஅதிமுக- பா.ஜ.க. மறைமுகக் கூட்டணிக்கு ஆதரவாகப் போகும் என கருணாநிதி கருதினார்.

பிரதமரின் தூதராக சந்திக்க வந்த அமைச்சர் கோயலிடம் இதனை கருணாநிதி சுட்டிக் காட்டினார். வாணியம்பாடியில் நடு நிலைஎன்று சொல்லி திமுகவுக்கு எதிராக வேலைகளை பா.ஜ.க. செய்தது. அதே வேலையை சாத்தான்குளத்திலும் செய்ய மாட்டீர்கள்என்பது என்ன நிச்சயம் என கருணாநிதி கேட்க பதில் சொல்ல முடியாமல் திரும்பினார் கோயல்.

இதையடுத்து காங்கிரஸ் வாக்குகள் சிதைத்து அதிமுகவுக்கு ஆதாயம் கிடைத்துவிடாமல் தடுக்க சாத்தான்குளத்தில் போட்டியிடப்போவதில்லை என்ற முடிவை கருணாநிதி எடுத்தார்.

பா.ஜ.கவும் கடைசி நேரத்தில் போட்டியில் இருந்து விலகிக் கொண்டு அதிமுகவை ஆதரிக்கலாம் என கருணாநிதி முன்பேசந்தேகப்பட்டது இப்போது உண்மையாகிவிட்டது. இதுவரை போட்டியிடுவோம் என்று கூறி வந்த பா.ஜ.க. இப்போது பல்டிஅடித்துள்ளது.

இத் தகவலை பா.ஜ.க. டெல்லி தலைமை அறிவித்துள்ளது. நேற்று பதவி நீக்கம் செய்யப்பட்டு பா.ஜ.கவின் தேசியப் பொதுச்செயலாளராக நியமிக்கப்பட்ட பிரமோத் மகாஜன் இதனை இன்று அறிவித்தார்.

அவர் கூறுகையில், தேசிய ஜனநாயகக் கூட்டணியில் ஒற்றுமையை நிலை நாட்டவே இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளது.திமுகவுடன் எங்களுக்கு பிரச்சனை ஏதும் இல்லை என்றார்.

"(சாத்தான்)குளத்தில் தாமரையும் இலையும்"

இந் நிலையில் சட்டமன்றத்தில் இன்று சாத்தான்குளம் தொடர்பாக மிக சுவாரஸ்யமான விவாதம் நடந்தது. அதிமுகவுடன் பா.ஜ.க.நெருங்குவதை பா.ஜ.க. எம்.எல்.ஏ. மறைமுகமாக சுட்டிக் காட்டினார்.

த.மா.கா.கா. உறுப்பினரைத் தாக்க திமுக எம்.எல்.ஏ. பரிதி இளம்வழுதி முயற்சித்ததைத் தொடர்ந்து அவர்சட்டசபைக் கூட்டத் தொடரிலிருந்து சஸ்பெண்ட் செய்யப்பட்டார். திமுக உறுப்பினர்களும் வெளியேற்றப்பட்டனர்.

திமுக உறுப்பினர்கள் வெளியேற்றப்பட்டிருந்தபோது, சட்டசபைக்குள் லட்சுமணன் பேசுகையில்,

குளத்திலே "தாமரை" மலர்ந்து இருப்பது ஒரு இயற்கையான நிகழ்ச்சிதான். தாமரைக்கு அருகே "இலைகள்" படர்ந்துஇருப்பதும் இயற்கையே.

ஆனால் அந்தக் குளத்தின் நடுவே ஒரு "கை" நீட்டிக் கொண்டிருப்பதைப் பார்த்து "ஐயோ, யாரோ மூழ்கப்போகிறார்களே" என்று நினைத்துக் கொண்டு அந்தக் "கை"யைப் பிடித்துத் தூக்கி விடுவதற்கு யாரும் (திமுக)முயற்சிக்கக் கூடாது.

ஏனென்றால் அந்தக் "கை" உதவி செய்ய வருபவர்களையும் தண்ணீருக்குள் இழுத்து மூழ்கடித்து விடும் என்றார்லட்சுமணன்.

uĀ gm] x: J : QҸ zv SŨlt;/b>

-->

 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X