கொலை வழக்கில் 7 பேருக்கு தூக்கு தண்டனை: தூத்துக்குடி நீதிமன்றம் தீர்ப்பு
தூத்துக்குடி:
தூத்துக்குடி அருகே முன் விரோதம் காரணமாக 6 பேரைக் கொலை செய்த வழக்கில் 7 பேருக்கு தூக்குதண்டனையும், 7 பேருக்கு ஆயுள் தண்டனையும் வழங்கி தூத்துக்குடி நீதிமன்றம் தீர்ப்பளித்தது.
தூத்துக்குடி மாவட்டம் தருவைகுளத்தைச் சேர்ந்த சூசை மைக்கேல் மற்றும் சூசை மரியான் ஆகிய இருவருக்கும்இடையே நீண்ட காலமாக முன் விரோதம் இருந்து வந்தது. இந்தப் பகை இன்று வரை தொடர்ந்து கொண்டுதான்இருக்கிறது. இதன் காரணமாக ஏராளமானவர்கள் கொலை செய்யப்பட்டுள்ளனர்.
இந்நிலையில் கடந்த 1998ம் ஆண்டு மார்ச் 4ம் தேதி தருவைகுளத்தில் ஒரு தனியார் பஸ்சை வழிமறித்த கும்பல்அந்த பஸ் மீது சராமாரியாக வெடிகுண்டுகளை வீசி எறிந்தது.
பின்னர் பஸ்சில் இருந்தவர்களை அரிவாளால் சராமாரியாக வெட்டியது. இதில் விஜய், ஆனந்த், அந்தோணிஅமலதாசன், அந்தோனி வினோபால், அந்தோனிசாமி மற்றும் ஜெயப்பிரகாஷ் ஆகிய 6 பேர் ரத்த வெள்ளத்தில்துடிதுடித்து இறந்தனர். பதில் தாக்குதலில் பென்சன் என்பவர் உயிரிழந்தார். வெடிகுண்டு வீசப்பட்டதால் பஸ்சும்எரிந்து சாம்பலானது.
இது தொடர்பாக பென்சன் உள்பட 31 பேர் மீது தருவைகுளம் போலீசார் வழக்குப் பதிவு செய்தனர். பென்சன் தவிரஜோசப் என்பவரும் இறந்துவிட்டதைத் தொடர்ந்து, மற்ற 29 பேர் மீதும் கடந்த 4 ஆண்டுகளாக இவ்வழக்குதூத்தக்குடி கூடுதல் அமர்வு நீதிமன்றத்தில் நடந்து வந்தது.
இந்நிலையில் வழக்கை விசாரித்த நீதிபதி ரத்தினராஜ் நேற்று இவ்வழக்கு தொடர்பான தீர்ப்பை வழங்கினார்.
குற்றம் சாட்டப்பட்டவர்களில் ரமேஷ், ரோச், அன்புராஜ், ரத்தினம், தொம்மையா சேவியர், தனபால் மற்றும் ரஞ்சித்ஆகிய 7 பேருக்கு தூக்குத் தண்டனை வழங்கினார் நீதிபதி.
மேலும் நவமணி, யோகராஜ், அதிர்ஷ்டராஜ், சித்தரசு, ஜெலஸ்டின், சேகர் மற்றும் காளிதாஸ் 7 பேருக்கு ஆயுள்தண்டனையும் வழங்கி நீதிபதி தீர்ப்பளித்தார்.
தண்டனை பெற்ற 14 பேருக்கும் சேர்த்து ரூ.9 லட்சத்து 69 ஆயிரம் அபராதமும் விதிக்கப்பட்டது. இதில்கொலையுண்ட 6 பேரின் குடும்பத்தினருக்கும் தலா ரூ.1 லட்சம் இழப்பீடு வழங்கவும் நீதிபதி உத்தரவிட்டார்.
இவர்களைத் தவிர குற்றம் சாட்டப்பட்ட மற்ற 15 பேரையும் விடுதலை செய்யவும் நீதிபதி உத்தரவிட்டார்.
தீர்ப்பையொட்டி நீதிமன்ற வளாகத்தில் பெரும் கூட்டம் கூடியிருந்தது. இதனால் நூற்றுக்கும் மேற்பட்ட போலீசார்பாதுகாப்புப் பணியில் ஈடுபடுத்தப்பட்டிருந்தனர்.


