""அதிமுகவின் அவதூறுகள் பொய்க்கால் குதிரைகள்"": கருணாநிதி
சென்னை:
தன் மீதும் திமுகவின் மீதும் வீண்பழி சுமத்துவதையே அதிமுக அரசு லட்சியமாகக் கொண்டுள்ளது என்று திமுகதலைவர் கருணாநிதி கூறியுள்ளார்.
தற்போது நடந்து வரும் சட்டசபைக் கூட்டத் தொடரில், காவிரிப் பிரச்சனை குறித்தும் தினமும் விவாதம் நடந்துவருகிறது. காவிரிப் பிரச்சனை விஸ்வரூபம் எடுத்துள்ளதற்கு திமுகவும் அதிமுகவும் ஒருவரையொருவர் குற்றம்சாட்டிக் கொண்டிருக்கின்றனர்.
காவிரி நதி நீர் ஆணையம் உருவாக வேண்டும் என்று கையெழுத்துப் போட்டதே கருணாநிதிதான் என்றும்இதனால்தான் காவிரி பிரச்சனை இன்னும் தொடர்ந்து கொண்டிருக்கிறது என்றும் முதல்வர் ஜெயலலிதா தொடர்ந்துகூறிக் கொண்டுதான் உள்ளார்.
இந்நிலையில் ஜெயலலிதா அரசின் குற்றச் சாட்டுக்களை எதிர்த்து இன்று கருணாநிதி ஒரு அறிக்கைவெளியிட்டுள்ளார். அந்த அறிக்கை விவரம்:
1974ல் காவிரி ஒப்பந்தம் காலாவதியாகி விட்டதாக நான் எப்போதும் கூறவே இல்லை. திமுகவும் அப்படி எதுவும்எப்போதும் கூறியது கிடையாது.
இன்னும் சொல்லப் போனால் அந்த ஒப்பந்தம் காலாவதியாகிவிட்டது என்ற பேச்சுக்கே இடமில்லை. 50ஆண்டுகளுக்குப் பின்னர் கூடுதல் நீரைப் பயன்படுத்துவது குறித்து மட்டுமே மறுபரிசீலனை செய்து கொள்ளாம்என்று அந்த ஒப்பந்தத்தில் கூறப்பட்டுள்ளது.
இது தொடர்பாக 1969ம் ஆண்டு நடைபெற்ற சட்டசபைக் கூட்டத்திலேயே உறுப்பினர் ஒருவர் கேட்டபோது நான்தெளிவாகப் பதிலைக் கூறியுள்ளேன். எனவே உண்மைக்குப் புறம்பானதை பொன்னையன் திரும்பத் திரும்ப கூறிக்கொண்டிருக்க வேண்டிய அவசியமே இல்லை.
மேலும் 1970களில் திமுக "தூங்கிக் கொண்டிருந்த" காரணத்தால்தான் காவிரி விவகாரம் தற்போது மிகவும்மோசமாக வெடித்துள்ளதாகவும் பொன்னையன் கூறினார். அதுவும் தவறு.
கர்நாடகாவில் கபினி, ஹேமாவதி, ஸ்வர்ணவதி நதிகளின் குறுக்கே அம்மாநில அரசு அணை கட்டுவதை எதிர்த்து1971ம் ஆண்டு ஜூலை 8ம் தேதி தமிழக சட்டசபையில் அப்போதைய திமுக அரசு தீர்மானம் நிறைவேற்றியுள்ளது.
மேலும் 1972ல் கர்நாடக மற்றும் கேரள முதல்வர்களுடன் காவிரி நீர் பங்கீட்டு முறை குறித்து முக்கியக்கூட்டத்திலும் நான் கலந்து கொண்டேன். காவிரி நீரைப் பயன்படுத்துவது குறித்து அப்போது முக்கிய முடிவையும்நாங்கள் எடுத்தோம்.
பின்னர் கடந்த 1990ம் ஆண்டு காவிரி நடுவர் நீதிமன்றம் இடைக்காலத் தீர்ப்பை வழங்கியது. ஆனால் அதன்பிறகு 1991 முதல் 1996 வரை ஆட்சியிலிருந்த அதிமுக அரசு அந்தத் தீர்ப்பைச் சிறிதளவும் மதிக்கவில்லைஎன்பதுதான் உண்மை.
அதற்கான முயற்சிகளைக் கூட அப்போதைய அதிமுக அரசு எடுக்கவே இல்லை. மேலும் பிரதமர் வாஜ்பாய்தலைமையிலான காவிரி ஆணையத்தையே தொடர்ந்து குறை கூறி வருகிறார் ஜெயலலிதா. ஆனால் திமுகதான்காவிரி டெல்டா விவசாயிகளுக்குத் துரோகம் செய்துவிட்டதாகப் புகார் கூறிக் கொண்டு வருகிறார்.
முந்தைய திமுக ஆட்சிக் காலங்களில் எப்போதாவது காவிரி ஆறு வறண்டு போனது உண்டா? குறுவை, சம்பாபயிர்கள் கருகியது உண்டா? பட்டினிச் சாவுகள் நடந்தது உண்டா?
இந்த மோசமான, கவலை தரும் சம்பவங்கள் எல்லாமே தற்போது அதிமுக ஆட்சியில்தான் நடந்துகொண்டிருக்கின்றன.
ஆனால் திமுக மீது அவதூறுகளைத் தூவி விட்டுக் கொண்டிருக்கிறது. இந்த அவதூறுகள் எல்லாம் வெறும்பொய்க்கால் குதிரைகள்தான் என்று அவ்வறிக்கையில் கருணாநிதி கூறியுள்ளார்.


