மாறனுக்கு மீண்டும் அறுவை சிகிச்சை: உடல் நலம் தேறுகிறார்
டெல்லி:
மத்திய அமைச்சர் முரசொலி மாறனின் உடல் நிலையில் மீண்டும் பின்னடைவு ஏற்பட்டதைத் தொடர்ந்து அவருக்குமற்றொரு அறுவைச் சிகிக்சை செய்யப்பட்டது. இதைத் தொடர்ந்து அவர் நலமாக இருப்பதாக அவருக்கு சிகிச்சைஅளித்து வரும் டாக்டர்கள் தெரிவித்தனர்.
செயற்கை இருதய வால்வில் ஏற்பட்ட பூஞ்சைத் தொற்று காரணமாக கடந்த ஆறு மாதங்களாக உடல்நிலைபாதிக்கப்பட்டுள்ளார் மாறன்.
சென்னை அப்பல்லோவில் சிகிச்சை பெற்று வந்த அவர் பின்னர் மேல் சிகிச்சைக்காக அமெரிக்காவின் ஹூஸ்டன்நகரில் உள்ள புகழ்பெற்ற "மெத்தடிஸ்ட்" மருத்துவமனைக்கு கொண்டுசெல்லப்பட்டார். அங்கு அவருக்குத்தொடர்ந்து சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
இந்நிலையில் இந்த வாரத் துவக்கத்தில் மாறனின் உடல்நிலையில் சற்றே பின்னடைவு ஏற்பட்டது. இதையடுத்துநேற்று அவருடைய இருதயத்தில் மீண்டும் ஒரு அறுவைச் சிகிச்சை செய்யப்பட்டது. ஏற்கனவேபொருத்தப்பட்டிருந்த "மிட்ரல் வால்வு" என்ற செயற்கை வால்வின் அருகிலேயே இந்த அறுவைச் சிகிச்சைமேற்கொள்ளப்பட்டது.
"தற்போதுள்ள சூழ்நிலையில் இந்த அறுவைச் சிகிச்சையை மேற்கொள்ள வேண்டியது அவசியம். அதனால்தான்செய்தோம். அறுவைச் சிகிச்சைக்குப் பின்னர் மாறனின் உடல்நிலை நன்றாக உள்ளது" என்று அவருக்கு சிகிச்சைஅளித்து வரும் டாக்டர்கள் கூறினர். இருந்தாலும் தீவிர சிகிச்சைப் பிரிவிலேயே அவர் தொடர்ந்துவைக்கப்பட்டுள்ளார்.
மாறனின் உடல்நிலை குறித்த தகவல்களை பிரதமர் வாஜ்பாயும், மத்திய நலத் துறை அதிகாரிகளும் உடனுக்குடன்விசாரித்து அறிந்து கொண்டிருக்கின்றனர்.
இதற்கிடையே இன்று காலை திமுக தலைவர் கருணாநிதியைத் தொலைபேசியில் தொடர்பு கொண்ட வாஜ்பாய்,மாறனின் உடல்நிலை குறித்து கேட்டறிந்தார். மாறன் நலமுடன் இருப்பதாகவும் விரைவில் குணமடைவார் என்றும்வாஜ்பாயிடம் கருணாநிதி அப்போது தெரிவித்தார்.
நேற்றைய மத்திய அமைச்சரவை மாற்றத்தின்போது மாறன் வகித்து வந்த தொழில் மற்றும் வர்த்தகத் துறை புதியசட்டத் துறை அமைச்சரான அருண் ஜேட்லியிடம் கூடுதலாக ஒப்படைக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.
எந்த இலாகாப் பொறுப்பும் இல்லாமல் மாறன் தொடர்ந்து அமைச்சரவையிலேயே இருக்கிறார்.


