லஞ்சம் வாங்கிய பெரம்பலூர் சப்-கலெக்டர் சஸ்பெண்ட்
பெரம்பலூர்:
வேலை வாங்கித் தருவதாகக் கூறி பொதுமக்களிடம் ரூ.75,500 வரை லஞ்சம் வாங்கிய பெரம்பலூர் மாவட்டசப்-கலெக்டரும், அம்மாவட்ட கலெக்டரின் நேர்முக உதவியாளருமான பூமிநாதன் சஸ்பெண்ட்செய்யப்பட்டுள்ளார்.
சென்னையைச் சேர்ந்த பூமிநாதன், சில ஆண்டுகளுக்கு முன் காஞ்சிபுரம் மாவட்டம் திருப்போரூரில்தாசில்தாராகப் பணிபுரிந்து வந்தார்.
அப்பகுதியில் உள்ள காலிப்புதூர் கிராமத்தில் அரசுக்குச் சொந்தமான புறம்போக்கு நிலத்தைப் பலருக்கும் பட்டாபோட்டுக் கொடுத்து அரசுக்குப் பெரும் நஷ்டத்தை ஏற்படுத்தினார்.
பின்னர் விழுப்புரம் மாவட்ட ஆதி திராவிடர் நலத் துறை அதிகாரியாக அவர் பணிபுரிந்தபோதும் பலமுறைகேடுகளில் ஈடுபட்டார். ஆசிரியர் பணிகளில் சேர விரும்புபவர்களுக்கு போலியான "சால்வன்ஸி"சான்றிதழ்களைக் கொடுத்து "உதவி"யுள்ளார்.
இந்நிலையில் பெரம்பலூர் மாவட்ட சப்-கலெக்டராக இடமாற்றம் செய்யப்பட்ட பூமிநாதன், அம்மாவட்டகலெக்டரின் பி.ஏவாகவும் நியமிக்கப்பட்டார்.
இந்நிலையில் வேலை வாங்கித் தருவதாக அவர் பொதுமக்கள் பலரிடமிருந்து ரூ.75,500 வரை லஞ்சப் பணத்தைப்பெற்றுள்ளார். இது தொடர்பாகப் பலரும் தமிழக அரசிடம் புகார் செய்தனர்.
இது தொடர்பான விசாரணையில் அவர் லஞ்சம் வாங்கியிருப்பது உண்மை என்று தெரிய வரவே, பூமிநாதனைஉடனடியாக சஸ்பெண்ட் செய்ய அரசு உத்தரவிட்டது.


