For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

கேபிள் டி.வி. கட்டணங்கள் "கிடுகிடு" உயர்வு

By Staff
Google Oneindia Tamil News

சென்னை:

பெரும்பாலும் அனைத்து சாட்டிலைட் டி.விக்களும் "பே-சேனலாக" மாற்றப்பட்டுள்ளதால் கேபிள் டி.வி.கட்டணங்கள் கிடுகிடுவென உயரத் தொடங்கியுள்ளன.

இதையடுத்து சென்னை, மதுரை, கோயம்புத்தூர், திருச்சி போன்ற முக்கிய நகரங்களில் ஏற்கனவே கேபிள் டி.வி.கட்டணங்கள் ரூ.50 முதல் ரூ.100 வரை உயர்த்தப்பட்டுள்ளன.

சன், ஜெயா, ராஜ், ராஜ் டிஜிட்டல் பிளஸ், பொதிகை, விண் மற்றும் தமிழன் டி.வி. ஆகிய தமிழ் சேனல்கள் மட்டுமேதற்போது "ப்ரீ சேனல்களாக" உள்ளன.

ஸ்டார் விஜய், கே, சன் நியூஸ் ஆகிய சாட்டிலைட் டி.விக்கள் "பே சேனல்களாக" மாற்றப்பட்டுள்ளன. மேலும்ஸ்டார், ஸ்டார் ஸ்போர்ட்ஸ், ஈ.எஸ்.பி.என்., ஏ.எக்ஸ்.என்., அனிமல் பிளானெட், டிஸ்கவரி உள்ளிட்ட பலடி.விக்களும் கடந்த 1ம் தேதி முதல் கேபிள் ஆபரேட்டர்களுக்கான கட்டணங்களை உயர்த்தியுள்ளன.

இவை 25 சதவீதம் முதல் 100 சதவீதம் வரை கட்டணங்களை உயர்த்தியுள்ளதால், கேபிள் டி.வி. கட்டணங்களைஉயர்த்துவதைத் தவிர தங்களுக்கு வேறு வழியே தெரியவில்லை என்று கேபிள் ஆபரேட்டர்கள் கூறுகின்றனர்.

சென்னை, மதுரை, கோயம்புத்தூர், திருச்சி போன்ற நகரங்களில் கேபிள் கட்டணம் ஏற்கனவே ரூ.150லிருந்துரூ.200ஆக அதிகரித்து விட்டது. வரும் மார்ச் மாதம் முதல் ரூ.300 வரை வசூலிக்கவும் கேபிள் ஆபரேட்டர்கள்முடிவு செய்துள்ளனர்.

இதற்கிடையே மக்கள் தாங்கள் விரும்பும் சேனல்களை மட்டும் பார்த்துக் கொள்ளும் வசதி வரும் ஜூலை மாதம்அமலுக்கு வருகிறது. இதற்காக "செட்-டாப் பாக்ஸ்" அல்லது "கன்டிஷனல் ஆக்சஸ் சிஸ்டம்" என்ற கருவி டி.வியுடன்பொருத்தப்பட வேண்டும்.

இந்தக் கருவியின் விலை மட்டுமே ரூ.4,000 முதல் ரூ.9,000 வரை இருக்கும் என்று தெரிகிறது.

uĀ gm] x: J : QҸ zv SŨlt;/b>

-->

 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X