பரிதி விவகாரம் எதிரொலி: சட்டசபையை புறக்கணித்த எதிர்க் கட்சிகள்
சென்னை:
திமுக எம்.எல்.ஏ. பரிதி இளம்வழுதி மீது கிரிமினல் நடவடிக்கை எடுக்கப்படும் என்று சபாநாயகர் காளிமுத்துதீர்மானம் நிறைவேற்றியதைக் கண்டித்து இன்று தமிழக சட்டசபையை எதிர்க் கட்சிகள் ஒட்டுமொத்தமாகப்புறக்கணித்தனர்.
இந் நிலையில் கடந்த ஒரு வார காலமாக நடந்து வந்த சட்டமன்றம் இன்று ஒத்தி வைக்கப்பட்டது.
த.மா.கா.கா. எம்.எல்.ஏவான டாக்டர் குமாரதாஸை அடிக்கப் பாய்ந்த பரிதி, அவரைக் கொலை செய்து விடுவேன்என்றும் மிரட்டியதாக சபாநாயகரிடம் புகார் கூறப்பட்டது.
இதையடுத்து பரிதியை இந்தத் தொடர் மட்டுமில்லாமல் வரும் பட்ஜெட் கூட்டத் தொடரிலிருந்தும் சஸ்பெண்ட்செய்வதாக காளிமுத்து அறிவித்தார். மேலும் கொலை மிரட்டல் விடுத்ததால் பரிதி மீது கிரிமினல் நடவடிக்கைஎடுப்பது தொடர்பாகவும் சட்டசபையில் ஒரு தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.
இந்நிலையில் பரிதி சஸ்பெண்ட் செய்யப்பட்டதைக் கண்டித்து இன்று பா.ஜ.க. தவிர அனைத்து எதிர்க் கட்சிகளும்ஒட்டுமொத்தமாக தமிழக சட்டசபை நடவடிக்கைகளைப் புறக்கணித்தனர்.
திமுக, காங்கிரஸ், பாமக, இந்திய கம்யூனிஸ்ட், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட், விடுதலைச் சிறுத்தைகள், காங்கிரஸ்ஜனநாயகப் பேரவை ஆகிய முக்கிய எதிர்க் கட்சிகள் சட்டசபையைப் புறக்கணித்தன.
பின்னர் சட்டசபை வளாகத்தில் உள்ள எதிர்க் கட்சித் தலைவரான அன்பழகனின் அறையில் எதிர்க் கட்சிஉறுப்பினர்கள் ஆலோசனை நடத்தினர்.
எதிர்க் கட்சிகளின் உரிமைகளைக் காக்க வேண்டிய காளிமுத்து, ஆளுங்கட்சிக்கு ஆதரவாகப் பேசியதுகண்டிக்கத்தக்கது என்றும் பரிதி மீதான நடவடிக்கைகளை உடனடியாகக் கைவிட வேண்டும் என்றும் அந்தஆலோசனைக் கூட்டத்தில் முடிவு செய்யப்பட்டது.
சட்டசபை ஒத்தி வைப்பு:
இந் நிலையில் சட்டமன்றம் இன்று காலவரையின்றி ஒத்தி வைக்கப்பட்டது. அடுத்த பட்ஜெட் கூட்டத் தொடர் பிப்ரவரி கடைசிவாரத்தில் அல்லது மார்ச் முதல் வாரத்தில் கூடும் என்று தெரிகிறது.


