திருச்சியிலும் காந்தப் படுக்கை மோசடி: 9 பேர் கைது
திருச்சி:
சென்னையைத் தொடர்ந்து திருச்சியிலும் காந்தப் படுக்கை மோசடியில் ஈடுபட்டிருந்த 9 பேரைப் போலீசார் கைதுசெய்தனர்.
மும்பையைத் தலைமையிடமாகக் கொண்ட "ஜப்பான் லைப் இந்தியா" என்ற நிறுவனம் சென்னையில் காந்தப்படுக்கைகள் என்ற பெயரில் போலிப் படுக்கைகளை மக்களுக்கு விற்று ரூ.30 கோடி வரை மோசடி செய்தது.
இந்த மோசடி தொடர்பாக 84க்கும் மேற்பட்டவர்கள் கைது செய்யப்பட்டனர். இவர்களில் பெரும்பாலானவர்கள்என்ஜினியர்கள் மற்றும் டாக்டர்கள்.
இந்நிலையில் திருச்சியிலும் போலி காந்தப் படுக்கைகளை விற்று மக்களிடம் மோசடி நடப்பதாகப் போலீசாருக்குத்தகவல் கிடைத்தது.
இதையடுத்து பெல் டவுன்ஷிப் மற்றும் திருவெறும்பூர் பகுதிகளில் போலீசார் அதிரடிச் சோதனைகளை நடத்தினர்.
அப்போது பெல் நிறுவனத்தைச் சேர்ந்த ஊழியர்களான ஈஸ்வரன், நடராஜன், பக்கிரிசாமி, போஸ், மைக்கேல்,செல்வராஜ் மற்றும் ஜீவராஜ் ஆகியோர் கைது செய்யப்பட்டனர்.
அவர்கள் திருச்சியில் சுமார் 100 பேருக்கு இதுபோன்ற போலி காந்தப் படுக்கைகளை விற்று மோசடி செய்ததுதெரிய வந்தது. அவர்களிடமிருந்து போலி காந்தப் படுக்கைகள், போலி அழகுசாதனப் பொருட்கள், போலி டூத்பேஸ்ட்டுகள் உள்ளிட்ட பொருட்கள் கைப்பற்றப்பட்டன.
அதேபோல் "விகேன்" என்ற நிறுவனத்தின் பெயரில் போலி காந்தப் படுக்கைகளை விற்றதாக நாராயணசாமி,வாசுதேவன் ஆகிய இருவரும் கைது செய்யப்பட்டனர். அவர்களிடமிருந்தும் போலி காந்தப் படுக்கைகள்கைப்பற்றப்பட்டன.
கைது செய்யப்பட்ட ஒன்பது பேரும் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டு பின்னர் சிறையில் அடைக்கப்பட்டனர்.


