காளிமுத்து மீது நம்பிக்கை இல்லா தீர்மானம்: திமுக முடிவு
சென்னை:
திமுக எம்.எல்.ஏவான பரிதி இளம்வழுதி மீது கிரிமினல் நடவடிக்கை எடுத்தால் அதை எதிர்த்து சபாநாயகர் மீதுசட்டசபையில நம்பிக்கை இல்லா தீர்மானம் கொண்டு வருவோம் என்று அக்கட்சியின் தலைவர் கருணாநிதிகூறினார்.
சட்டசபையில் நேற்று திமுக குறித்துப் பேசிய த.மா.கா.கா. தலைவர் டாக்டர் குமாரதாஸைத் தாக்குவதற்குப் பாய்ந்துசென்றார் பரிதி. மேலும் குமாரதாஸைக் கொன்று விடப் போவதாகவும் அவர் மிரட்டினார்.
இதையடுத்து திமுக உறுப்பினர்கள் அனைவரையும் அவைக் காவலர்களை விட்டு வெளியேற்றிய காளிமுத்து,பரிதிக்கு எதிராகக் கிரிமினல் நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் ஒரு தீர்மானத்தை நிறைவேற்றினார்.
இந்தச் சம்பவத்தையடுத்து திமுக தலைமையகமான அறிவாலயத்தில் நேற்று மாலை அக்கட்சி எம்.எல்.ஏக்களின்கூட்டம் கருணாநிதி தலைமையில் நடைபெற்றது. கூட்டத்திற்குப் பின்னர் நிருபர்களிடம் கருணாநிதி பேசுகையில்,
பரிதி மீது கிரிமினல் நடவடிக்கை எடுக்கப்பட்டால் நாங்கள் எதிர்க் கட்சிகளோடு ஆலோசனை நடத்தி முக்கியநடவடிக்கைகளை எடுப்போம்.
முதலில் சட்டசபையில் மேற்கொள்ளப்படுகிற நடவடிக்கையாக இருக்கலாம். சபாநாயகர் மீது நம்பிக்கை இல்லாதீர்மானமாகக் கூட இருக்கலாம். சட்டசபைக்கு வெளியே போராட்டமும் நடத்தலாம்.
ஆனால் எதிர்க் கட்சிகளுடன் ஆலோசனை செய்த பின்னர்தான் முடிவு எடுக்கப்படும் என்றார் கருணாநிதி.
மேலும் எங்களுடைய எதிர்ப்பைக் காட்டும் வகையில் வெள்ளிக்கிழமை (இன்று) சட்டசபை நடவடிக்கைகளில்திமுக உறுப்பினர்கள் கலந்து கொள்ள மாட்டார்கள் என்றும் கருணாநிதி கூறினார்.


