தமிழகத்தில் மசூதிகளிலும் அன்னதானத் திட்டம்
ராமநாதபுரம்:
தமிழகத்தில் உள்ள முக்கியமான மசூதிகள் மற்றும் தர்ஹாக்களில் விரைவில் அன்னதானத் திட்டம்செயல்படுத்தப்படும் என்று மாநில வக்ப் வாரியத் தலைவரான பதர் சயீத் கூறினார்.
தமிழகத்தில் உள்ள 63 கோவில்களில் கடந்த ஆண்டு பிப்ரவரி மாதம் இலவச அன்னதானத் திட்டம்துவக்கப்பட்டது. ஏழை, எளிய மக்களுக்குத் தினந்தோறும் மதிய நேரத்தில் இலவசமாக உணவு வழங்க வகைசெய்யும் அந்தத் திட்டம் இப்போதும் செயல்பட்டு வருகிறது.
இந்நிலையில் மசூதிகளிலும் இதுபோன்ற அன்னதானத் திட்டத்தைக் கொண்டுவர வக்ப் வாரியம் ஏற்பாடுசெய்துள்ளது.
இது தொடர்பாக ராமநாதபுரத்தில் பதர் சயீத் நிருபர்களிடம் கூறுகையில்,
தமிழகத்தின் முக்கிய இடங்களில் உள்ள மசூதிகள், தர்ஹாக்கள் ஆகியவற்றிலும் அன்னதானத் திட்டம் விரைவில்துவங்கப்படவுள்ளது.
வக்ப் வாரியத்தின் செயல்பாடுகளுக்கு அனைத்து ஜமாத்தினரும் உதவ வேண்டும். வாரியத்தின் உத்தரவுகளையும்நல்ல முறையில் செயல்படுத்த வேண்டும் என்றார் சயீத்.
-->












Click it and Unblock the Notifications