சாத்தான்குளம் இடைத் தேர்தல்: வேட்பு மனுத் தாக்கல் தொடங்கியது
சாத்தான்குளம்:
வரும் பிப்ரவரி 26ம் தேதி இடைத் தேர்தல் நடைபெறவுள்ள நிலையில் சாத்தான்குளத்தில் இன்று காலை வேட்புமனுத் தாக்கல் தொடங்கியது.
சாத்தான்குளம் தொகுதி தமாகா எம்.எல்.ஏவாக இருந்த எஸ்.எஸ். மணிநாடார் கடந்த நவம்பர் 9ம் தேதி திடீரென்றுகாலமானதைத் தொடர்ந்து அங்கு அடுத்த மாதம் இடைத் தேர்தல் நடக்கவுள்ளது.
இத்தேர்தலில் நிச்சயம் போட்டியிடுவோம் என்று அதிமுக, காங்கிரஸ் ஆகிய கட்சிகள் அறிவித்துள்ளன. ஆனால்இன்னும் வேட்பாளர் குறித்த அறிவிப்பை இரு கட்சிகளுமே இன்னும் வெளியிடவில்லை.
திமுக இந்தத் தேர்தலைப் புறக்கணிக்கப் போவதாக அறிவித்து, காங்கிரசுக்குத் தன்னுடைய ஆதரவைமறைமுகமாகத் தெரிவித்து விட்டது. திமுகவை நோக்கி வேகமாக நெருங்கிக் கொண்டிருக்கும் மதிமுகவும் இந்தஇடைத் தேர்தலைப் புறக்கணிக்கப் போவதாக அறிவித்து விட்டது.
இந்நிலையில் இந்தத் தேர்தலில் போட்டியிடப் போவதில்லை என்று பா.ஜ.கவும் நேற்று அறிவித்து விட்டது.இதன்மூலம் அக்கட்சி அதிமுகவுக்கு மறைமுகமாக ஆதரவளிக்கத் திட்டமிட்டுள்ளது.
இதையடுத்து சாத்தான்குளம் இடைத் தேர்தலில் அதிமுகவுக்கும் காங்கிரசுக்கும் இடையே நேரடிப் போட்டி நிலவும்.
இந்நிலையில் சாத்தான்குளம் இடைத் தேர்தலுக்கான வேட்புமனு தாக்கல் இன்று காலை தொடங்கியது. பிப்ரவரி7ம் தேதி வரை தேர்தலில் போட்டியிட விரும்பும் வேட்பாளர்கள் தங்கள் மனுக்களைத் தாக்கல் செய்யலாம்.
பின்னர் 8ம் தேதி வேட்பு மனுக்கள் பரிசீலனை செய்யப்படும். வேட்பு மனுக்களை வாபஸ் பெற்றுக் கொள்ளபிப்ரவரி 10ம் தேதிதான் இறுதி நாளாகும். இதையடுத்து 26ம் தேதி இடைத் தேர்தல் நடைபெறும்.
மார்ச் 1ம் தேதி வாக்கு எண்ணிக்கை நடைபெற்று அன்றைய தினமே முடிவுகள் அறிவிக்கப்படும்.


