நாளை ஜெயலலிதா கடலூர் வருகை: கருப்புக் கொடி காட்ட விவசாயிகள் திட்டம்- போலீஸ் குவிப்பு
கடலூர்:
புதிய வீராணம் திட்டத்தைத் துவக்கி வைக்க வரும் முதல்வர் ஜெயலலிதாவுக்கு எதிராகக் கருப்புக் கொடி காட்ட விவசாயிகள்திட்டமிட்டுள்ளனர்.
கடும் வறட்சியால் பாதிக்கப்பட்டுள்ள விவசாயிகள் அரசுக்கு எதிராக ஆங்காங்கே போராட்டம் நடத்தி வருகின்றனர். இந்நிலையில் ரூ. 820 கோடி செலவில் சென்னைக்குக் குடிநீர் வழங்கும் புதிய வீராணம் திட்டத்துக்கு அடிக்கல் நாட்ட நாளைஜெயலலிதா ஹெலிகாப்டர் மூலம் கடலூர் வருகிறார்.
இதற்காக கடலூரில் ஹெலிபேட் அமைக்கப்பட்டுள்ளது. இந்த ஹெலிபேடில் இன்று ஒரு ஹெலிகாப்டரை இறக்கி ஒத்திகையும்பார்க்கப்பட்டது.
வீராணம் ஏறி வற்றிப் போய் கிடப்பதால் இந்தத் திட்டமே வேஸ்ட் என்று கூறப்படுகிறது. மேலும் இந்த ஏரி நீரை சென்னைக்குத்திருப்பி விடுவதால் கடலூர் மாவட்ட விவசாயிகளுக்கு பெரும் பாதிப்பு ஏற்படும் என்றும் விவசாயிகள் கூறுகின்றனர்.
இந் நிலையில் நாளை கடலூர் வரும் ஜெயலலிகாவுக்கு கருப்புக் கொடி காட்ட விவசாயிகள் சங்கமும், காங்கிரஸ் கட்சியின் தேசியவிவசாயிகள் பேரவையும் திட்டமிட்டுள்ளன.
இந்த கருப்புக் கொடி ஆர்பாட்டத்தை முறியடிக்கும் வகையில் கடலூரில் நாளை ஆயிரக்கணக்கான போலீசார் குவிக்கப்படஉள்ளனர். இதற்காக பல மாவட்டங்களில் இருந்து போலீசார் கடலூர் கொண்டு செல்லப்பட்டு வருகின்றனர்.
மேலும் கருப்புக் கொடி போராட்டம் நடத்துபவர்களைத் தடுக்குமாறு அதிமுக தொண்டர்களுக்கும் மாவட்டச் செயலாளர்உத்தரவிட்டுள்ளார். இதனால் நாளை கடலூரில் அமளி மூளும் அபாயமும் ஏற்பட்டுள்ளது.
-->












Click it and Unblock the Notifications