போலீசாருக்கு டிமிக்கி: தப்பியோடிய திருடன்
கோயம்புத்தூர்:
பொது மக்களால் பிடிக்கப்பட்டு போலீசாரிடம் ஒப்படைக்கப்பட்ட திருடன் மருத்துவமனையில் இருந்து தப்பியோடிவிட்டான்.
சமீபத்தில் திருப்பூரில் ஒரு வழிபாட்டுத் தலத்தில் திருட முயன்ற வாலிபரை பொது மக்களை விரட்டிப் பிடித்தனர். பொது மக்கள்கொடுத்த தர்ம அடியில் அவன் பலத்த காயமடைந்தான்.
இதையடுத்து அவன் போலீசாரிடம் ஒப்படைக்கப்பட்டான். பலத்த காயமடைந்த அவனுக்கு உடலில் தையல்கள் போடப்பட்டன.பின்னர் அவன் கோயம்புத்தூர் அரசு மருத்துவமனையில் உள்ள கைதிகளுக்கான அறையில் வைக்கப்பட்டு தொடர்ந்து சிகிச்சைதரப்பட்டு வந்தது.
இன்று தையல்களைப் பிரிப்பதற்காக கைதிகள் அறையிலிருந்து வெளியே அழைத்து வரப்பட்டான். தையல் பிரிக்கப்பட்டபின்னர் அவனை சிறைக்குக் கொண்டு செல்ல போலீசார் திட்டமிட்டிருந்தனர்.
இது தொடர்பாக மருத்துவர்களுடன் போலீசார் பேசிக் கொண்டிருந்தபோது நைசாக அங்கிருந்து வெளியேறிதப்பியோடிவிட்டான.
-->












Click it and Unblock the Notifications