அந்த கடைசி நிமிடங்கள்...

Subscribe to Oneindia Tamil

நியூயார்க்:

கொலம்பியா ராக்கெட் வெடித்துச் சிதறுவதற்கு சில வினாடிகளுக்கு முன்புதான் அதில் ஏற்பட்ட தொழில்நுட்பகோளாறு பற்றி அதிலிருந்த விண்வெளி வீரர்களுக்குத் தெரிந்துள்ளது.

அமெரிக்க நேரப்படி நேற்று காலை 8.15 மணிக்கு விண்வெளியிலிருந்து வளிமண்டலத்திற்குள் நுழைந்தது.

அதன் பின்னர் கொலம்பியா தடுமாறுவதைக் கண்ட விண்வெளி வீரர்கள் சுமார் 45 நிமிடங்கள் வரை அதைக்கட்டுப்படுத்த முடியாமல் திணறியுள்ளனர்.

பின்னர் 8.53 மணிக்குத்தான் வெப்பநிலை சென்சார்கள் செயலிழந்ததை அவர்கள் கண்டுபிடித்தனர். நாசாவிண்வெளி நிலையத்தின் 42 ஆண்டுகால விண்வெளி வரலாற்றில் இப்படி ஒரு குறை ஏற்பட்டதே இல்லை.

இதையடுத்து 8.59 மணிக்கு டயர் அழுத்தம் குறைந்து விட்டதையும் விண்வெளி வீரர்கள் தரையில் ஹூஸ்டன்நகரில் உள்ள கட்டுப்பாட்டு மையத்திடம் தெரிவித்துள்ளனர்.

""உங்கள் அறிவிப்பை எங்களால் பார்க்க முடிகிறது. ஆனால் அதை நாங்கள் பதிவு செய்யவில்லை"" என்றுஹூஸ்டன் மையத்திலிருந்து கொலம்பியாவுக்குத் தகவல் பறந்தது.

""ஆனால் ரோகர்..."" என்று பதிலுக்கு கொலம்பியாவிலிருந்து யாரோ எதையோ பேச முயன்றுள்ளனர். அதற்குள்தகவல் தொடர்பு முழுவதுமாகத் துண்டிக்கப்பட்டு விட்டது.

கொலம்பியாவில் ஏற்பட்ட ஏதோ ஒரு முக்கியமான தொழில்நுட்பப் பிரச்சனை குறித்துதான் அவர் பேசமுயன்றுள்ளார். அது என்னவென்று தெரிந்து கொள்வதற்கு முன்பே தகவல் தொடர்பு துண்டிக்கப்பட்டு விட்டது.

தரைக் கட்டுப்பாட்டு மையத்தில் உள்ளவர்களால் "கிர்ர்ர்ர்ரக்" என்ற ஒலியை மட்டும்தான் கேட்க முடிந்தது. அதன்பின்னர் ஒரு சத்தமும் கேட்கவில்லை. அப்போதே அங்கிருந்தவர்களின் முகம் வாடத் தொடங்கி விட்டது.

அடுத்த 16வது நிமிடத்தில்தான் புளோரிடாவில் கொலம்பியா தரையில் இறங்க இருந்தது.

ஆனால் மிகப்பெரும் வெடிச் சத்தத்தை மட்டும்தான் டெக்ஸாஸ் மக்கள் கேட்டுள்ளனர். இதையடுத்து கொலம்பியாதீப்பிளம்பாக வெகு வேகமாகக் கீழே வந்து கொண்டிருப்பதை உலகமே நேரடியாகவும், டி.விக்களிலும் பார்த்துஅதிர்ச்சியில் உறைந்தது.

டெக்ஸாஸைச் சுற்றிலும் சுமார் 200 கி.மீ. தொலைவிற்கு கொலம்பியாவின் பாகங்கள் சிதறிக் கிடந்தன.

ஆனாலும் இவ்வாறு விழுந்த கொலம்பியாவின் துண்டுகளால் தரையில் உள்ளவர்களில் யாருக்கும் எந்தவிதமானபாதிப்போ, காயமோ ஏற்படவில்லை. ஒருசில வீடுகள் மட்டுமே பாதிப்படைந்தன. ஒரு வீட்டில் தீப்பற்றிக்கொண்டது. ஆனாலும் அது உடனடியாக அணைக்கப்பட்டு விட்டது.

வெடித்துச் சிதறிய கொலம்பியா விண்வெளி வீரர்களின் சிதறிய உடல் பகுதிகளும் சில இடங்களில் கிடந்ததுகண்டெடுக்கப்பட்டுள்ளது.

இந்தச் சம்பவத்தைத் தொடர்ந்து, இது தொடர்பான விசாரணைகள் அனைத்தும் முடிவடையும் வரை அடுத்தவிண்வெளிப் பயணம் எதையும் மேற்கொள்ளப் போவதில்லை என்று நாஸா அறிவித்துள்ளது.

-->

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+