ஏராளமான கனவுகளுடன் விண்ணுக்குச் சென்ற கல்பனா

Subscribe to Oneindia Tamil

நியூயார்க்:

தன்னுடைய 2வது விண்வெளிப் பயணத்துக்கு முன் ஏராளமான கனவுகளுடன்தான் விண்ணுக்குச் சென்றார்கல்பனா சாவ்லா. ஆனால் அதுவே அவருடைய கடைசிப் பயணமாகி விட்டது.

"விண்ணிலிருந்து மற்ற நட்சத்திரங்களைப் பார்ப்பது போலவே நம்முடைய பூமியைப் பார்த்து மகிழ்வதில் ஒரு தனிசுகமே இருக்கிறது. விண்ணுக்குச் செல்வது ஒரு கனவு. அந்தக் கனவு எனக்கு இரண்டாவது முறையாகக்கிடைத்துள்ளது" என்று தன் கடைசி விண்வெளிப் பயணத்திற்கு முன் தெரிவித்திருந்தார்.

இந்த 16 நாள் விண்வெளிப் பயணத்தின்போது மற்ற ஆறு வீரர்களுடன் அவர் முக்கியமான பல ஆராய்ச்சிகளில்ஈடுபட்டு அவற்றை வெற்றிகரமாகவும் செய்து முடித்தார் கல்பனா சாவ்லா.

ஆனால் யாருமே எதிர்பாராத வகையில் விண்வெளி ஆய்வுகள் அனைத்தையும் வெற்றிகரமாக முடித்துக் கொண்டுபூமிக்குத் திரும்புவதற்குச் சில நிமிடங்களுக்கு முன்பாக அவர்கள் வந்த கொலம்பியா விண்கலம் வெடித்துச் சிதறி,அனைத்து வீரர்களுமே கொல்லப்பட்டனர்.

கல்பனாவின் சொந்த ஊரான ஹரியானா மாநிலத்தில் உள்ள கர்னாலில் அவர் பூமிக்குத் திரும்புவதை விழாஎடுத்துக் கொண்டாட அவருடைய உறவினர்களும், நண்பர்களும், அவ்வூர் மக்களும் கூடியிருந்தனர்.

ஆனால் கொலம்பியா விண்கலம் வெடித்துச் சிதறி அவர் கொல்லப்பட்டதை அறிந்ததும் அவ்வூரே அதிர்ச்சியிலும்சோகத்திலும் ஆழ்ந்தது. கல்பனாவின் மறைவுக்காக இன்று பிரம்மாண்டமான பிரார்த்தனைக் கூட்டம் நடந்தது.

கல்பனா படித்த பள்ளியின் ஆசிரியர்களும் மாணவர்களும் சோகமே உருவாகக் காணப்பட்டனர்.

"சாதனைகளுக்குப் பரிசாகத் தன் உயிரையே தியாகம் செய்துள்ளார் கல்பனா. என்னுடைய துயரத்தைச் சொல்லவார்த்தைகளே இல்லை" என்று தழுதழுத்த குரலில் அவருடைய சகோதரரான சஞ்சய் சாவ்லா கூறினார்.

இதற்கிடையே கல்பனா இறப்பையொட்டி ஹரியானா மாநிலத்தில் இரண்டு நாள் துக்கம் அனுஷ்டிக்கப்படும் என்றுஅம்மாநில அரசு தெரிவித்துள்ளது.

கல்பனா பெயரில் விருது:

இதற்கிடையே கல்பனாவின் பெயரில் சிறந்த மாணவருக்கான விருது வழங்கப்படும் என்று பஞ்சாப் முதல்வர்இன்று அறிவித்துள்ளார்.

கல்பனா படித்த என்ஜினியரிங் கல்லூரியில் சிறந்த மாணவராகத் தேர்வு பெறுபவர்களுக்கு இந்த விருதுஆண்டுதோறும் வழங்கப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

அமெரிக்க இந்தியர்கள் இரங்கல்:

இதற்கிடையே அமெரிக்காவில் வசிக்கும் பல இந்தியர்கள் தங்கள் அமெரிக்க நண்பர்களுடன் வீடுகளில்அமர்ந்து கொலம்பியா வெடித்துச் சிதறிக் கீழே விழுந்த கோரக் காட்சியைப் பார்த்து அதிர்ச்சி அடைந்தனர்.

கல்பனா உள்ளிட்ட உயிரிழந்த ஏழு விண்வெளி வீரர்களின் குடும்பத்தினருக்கும் அங்கு வாழும் தங்கள் ஆழ்ந்தஅனுதாபங்களைத் தெரிவித்துள்ளனர்.

அடுத்த ஒரு வாரத்திற்குத் தங்களுடைய கேளிக்கை நிகழ்ச்சிள் அனைத்தையும் அவர்கள் ஒத்திவைத்து விட்டு,பல்வேறு அஞ்சலி நிகழ்ச்சிகளுக்கு ஏற்பாடு செய்துள்ளனர்.

-->

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+