நெல்லை மாவட்டத்தில் திடீர் மழை: குற்றால அருவிகளில் வெள்ளம்
திருநெல்வேலி:
திருநெல்வேலி மாவட்டத்தில் இன்று காலை திடீரென்று பலத்த மழை பெய்ததைத் தொடர்ந்து குற்றாலத்தில் உள்ளமுக்கிய அருவிகளில் வெள்ளப் பெருக்கு ஏற்பட்டுள்ளது.
கடந்த இரண்டு மாதங்களுக்கும் மேலாக ஒரு சொட்டு மழை கூடப் பெய்யாததால் தமிழகம் முழுவதும் கடும்வறட்சி ஏற்பட்டுள்ளது. இதனால் காவிரி டெல்டா பகுதிகளில் சம்பா பயிர்களும் முக்கால்வாசி கருகி விட்டன.
இந்நிலையில் திருநெல்வேலி மாவட்டத்தில் இன்று காலை பலத்த மழை பெய்தது. திருநெல்வேலி,சங்கரன்கோவில், பாபநாசம், குற்றாலம் உள்ளிட்ட இம்மாவட்டத்தில் உள்ள பல்வேறு ஊர்களிலும் கனமழைகொட்டியது.
பலத்த மழை காரணமாக குற்றாலத்தில் உள்ள மெயின் அருவி, ஐந்தருவி, பழைய குற்றாலம் போன்ற அருவிகளில்வெள்ளம் பெருக்கெடுத்து ஓடியது.
இந்தத் திடீர் மழையால் திருநெல்வேலி மாவட்ட மக்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர். இம்மழை காரணமாகபாபநாசம் அணையில் நீர் மட்டம் அதிகரிக்கத் தொடங்கியுள்ளது.
-->


Click it and Unblock the Notifications
