அன்னிய செலாவணி மோசடி: காரில் கடத்தப்பட்ட ரூ. 75 லட்சம் பறிமுதல்
சேலம்:
சென்னையில் இருந்து சேலத்துக்குக் காரில் கடத்தப்பட்ட ரூ. 75 லட்சம் பணம் பிடிபட்டது.
கேரளத்தைச் சேர்ந்த சில ஹவாலா மோசடி கும்பல்களுக்கு சென்னையில் இருந்து கோடிக்கணக்கில் பணம் சென்று வருவதைசமீபத்தில் தமிழக உளவுப் பிரிவினர் கண்டுபிடித்தனர்.
இதையடுத்து அன்னிய செலாவணி மோசடி கும்பல்கள் மீதான கண்காணிப்பு தீவிரப்படுத்தப்பட்டது. இந் நிலையில் சென்னையில்இருந்து சேலம், கோவை வழியாக கேரளாவுக்கு சுமார் 1 கோடி ரூபாய் கார் மூலம் கொண்டு செல்லப்பட உள்ள தகவல்போலீசாருக்குக் கிடைத்தது.
இதைத் தொடர்ந்து அந்தக் காரை வழியிலேயே மடக்கி பணத்தைக் கைப்பற்றுமாறு போலீசாருக்கு டி.ஜி.பி. ராஜகோபாலன்உத்தரவிட்டார். இதற்காக ஒரு தனிப் படையும் அமைக்கப்பட்டது. இந்தப் படையினர் நேற்று மாலை முதல் சேலம் அருகே உள்ளஅயோத்தியாபட்டிணம் சோதனைச் சாவடியில் கண்காணிப்பில் ஈடுபட்டனர்.
நள்ளிரவில் போலீசார் எதிர்பார்த்த அந்த டாடா குவாலிஸ் கார் அந்த சோதனைச் சாவடி அருகே வந்தது. அதை நிறுத்துமாறுபோலீசார் சைகை காட்டினர். ஆனால், அந்தக் கார் வேகமெடுத்துப் பறந்தது.
இதை எதிர்பார்த்த போலீசார் உடனே தயாராக வைத்திருந்த ஜீப்களில் அந்தக் காரை விரட்டினர். அதே நேரத்தில் அடுத்தடுத்துஇருந்த சோதனைச் சாவடிகளும் உஷார்படுத்தப்பட்டன. இதனால் அனைத்து சோதனைச் சாவடிகளிலும் குறிக்காக வாகனங்கள்நிறுத்தப்பட்டு மூடப்பட்டன.
போலீசாரால் விரட்டப்பட்ட அந்தக் கார் அன்னதானப்பட்டி என்ற இடத்தில் உள்ள சோதனைச் சாவடியில் அந்தக் கார்மடக்கப்பட்டது. உடனே அதில் இருந்து இறங்கிய 3 பேர் இருட்டில் தப்பி ஓட முயன்றனர். ஆனால், துப்பாக்கி முனையில்அவர்களை போலீசார் விரட்டிப் பிடித்தனர்.
இதையடுத்து கார் சோதனைக்குள்ளாக்கப்பட்டது. அப்போது டாஸ் போர்டில் ஒரு ரகசிய அறை உருவாக்கப்பட்டு உள்ளேவைக்கப்பட்டிருந்த ரூ. 10,000 கைப்பற்றப்பட்டது. காரை மேலும் நுணுக்கமாக போலீசார் ஆராய்ந்தபோது பின் சீட்டுக்குக் கீழ்ஒரு ரகசிய அறை இருப்பது தெரிந்தது. அதை உடைத்துப் பார்த்தபோது 500 ரூபாய், 100 ரூபாஸ் கட்டுக்கள் குவிந்து கிடந்தன.
ரூ.75 லட்சம் அதில் பதுக்கப்பட்டிருந்தது. இதையடுத்து அந்தக் காரில் இருந்த அப்பாஸ், வினோத் குமார், மனோஜ் ஆகியமூவரும் கைது செய்யப்பட்டனர். இவர்கள் ஹவாலா மோசடி கும்பல் என்பது விசாரணையில் உறுதியானது.
இவர்கள் மீது அன்னிய செலாவணிச் சட்டத்தின் கீழ் வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது. மூவரும் சேலம் சிறையில்அடைக்கப்பட்டுள்ளனர்.
-->
-
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள் -
நான் பார்த்துகிறேன் நண்பா.. உறுதியாக சொன்ன விஜய்.. அஜித் தாய் மறைந்த இரவு.. நடந்தது என்ன? -
பிளாக் அண்ட் ஒயிட் கோட் சூட் அணிவது இதற்காகத் தான்.. ரகசியத்தை போட்டு உடைத்த விஜய்! -
காலியான ராஜ்யசபா எம்பி பதவி! இன்று வேட்புமனு தாக்கல் தொடக்கம்! தவெகவின் முதல் எம்பி யார்?












Click it and Unblock the Notifications