சாத்தான்குளம் தொகுதி காங். வேட்பாளர் வழக்கறிஞர் மகேந்திரன்

Subscribe to Oneindia Tamil

டெக்ஸஸ்:

சாத்தான்குளம் இடைத் தேர்தலுக்கான காங்கிரஸ் வேட்பாளராக வழக்கறிஞர் ஏ. மகேந்திரன் நிறுத்தப்பட்டுள்ளார்.காங்கிரஸில் மீண்டும் சேருவதற்கு முன் இவர் தூத்தக்குடி மாவட்ட தமாகா துணைத் தலைவராக இருந்தார்.

சாத்தான்குளத்தில் வரும் 26ம் தேதி தேர்தல் நடக்கிறது. இதற்கான வேட்பு மனுத் தாக்கல் கடந்த ஜனவரி 30ம் தேதிதொடங்கியது.

இங்கு போட்டியிடும் அதிமுக ஏற்கனவே தன்னுடைய வேட்பாளரை அறிவித்து விட்டது. இக்கட்சியின்வேட்பாளரான நீலமேகவர்ணம் நேற்று தன்னுடைய வேட்பு மனுவையும் தாக்கல் செய்துவிட்டார்.

இந்நிலையில் சாத்தான்குளத்தில் அதிமுகவை நேரடியாக எதிர்த்துப் போட்டியிடுவதற்காக வழக்கறிஞரானமகேந்திரன் என்பவரைக் களத்தில் இறக்கியுள்ளது காங்கிரஸ்.

Mahendranகாங்கிரஸ் கட்சி சார்பாக போட்டியிட விருப்பம் தெரிவித்து மொத்தம் 22 பேர் விண்ணப்பித்து இருந்தனர்.இதையடுத்து நேற்று இரவு மகேந்திரன் அதிகாரப்பூர்வ வேட்பாளராக அறிவிக்கப்பட்டார். காங்கிரஸ் கட்சியின்அகில இந்தியப் பொதுச் செயலாளரான ரமேஷ் சென்னிதாலா இதை அறிவித்தார்.

தமிழக காங்கிரஸ் தலைவர் சோ. பாலகிருஷ்ணன், செயல் தலைவர் இளங்கோவன் மற்றும் சென்னிதாலா ஆகியமூன்று பேரும் நேற்று மாலை காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தியை அவருடைய வீட்டில் சந்தித்துப் பேசினர்.

அப்போதுதான் மகேந்திரனை காங்கிரஸ் வேட்பாளராக சாத்தான்குளத்தில் நிறுத்துவது என்று முடிவுசெய்யப்பட்டது.

இந்து நாடாரான நீலமேகவர்ணத்தை வேட்பாளராக அதிமுக நிறுத்தியதைத் தொடர்ந்து, அவரை எதிர்த்துப்போட்டியிட காங்கிரஸ் சிறுபான்மை கிருஸ்தவ நாடார் சமூகத்தைச் சேர்ந்த வேட்பாளரை நிறுத்துமா அல்லது இந்துநாடார் ஒருவரையே நிறுத்துமா என்று பலத்த எதிர்பார்ப்பு நிலவி வந்தது.

இந்நிலையில் மகேந்திரனை வேட்பாளராக அறிவித்துள்ளது காங்கிரஸ் கட்சி. சாத்தான்குளம் தாலுகாவைச் சேர்ந்தசுண்டங்கோட்டை கிராமத்தைச் சேர்ந்தவர் மகேந்திரன். அதிமுக வேட்பாளரின் படுக்கப்பத்து கிராமமும் இதற்குஅருகேதான் உள்ளது.

தூத்துக்குடி நீதிமன்றத்தில் வழக்கறிஞராகப் பணியாற்றி வரும் 47 வயதான மகேந்திரன், சட்டக் கல்லூரியில்படிக்கும்போதே காங்கிரஸ் கட்சியில் சேர்ந்து விட்டார். 1979-81ல் மதுரை சட்டக் கல்லூரி மாணவர் காங்கிரஸ்செயலாளராக இருந்துள்ளார்.

பின்னர் 1985-90ல் தூத்துக்குடி மாவட்ட இளைஞர் காங்கிரஸ் துணைத் தலைவராகவும், பின்னர் அம்மாவட்டகாங்கிரஸ் கட்சியின் துணைத் தலைவராகவும் பணியாற்றியுள்ளார்.

அதன் பின்னர் 1996ல் காங்கிரஸ் உடைந்து, மூப்பனார் தலைமையிலான தமாகா உருவானபோது அக்கட்சியின்தூத்துக்குடி மாவட்டத் துணைத் தலைவராக மகேந்திரன் நியமிக்கப்பட்டார். கடந்த ஆண்டு ஆகஸ்டு மாதம் தமாகாமீண்டும் காங்கிரசுடன் இணையும் வரை அவர் அப்பதவியில் நீடித்தார்.

இதற்கிடையே அதிமுகவைத் தோற்கடிக்க நினைக்கும் எந்தக் கட்சி வேண்டுமானாலும் தங்களுக்குஆதரவளிக்கலாம் என்றும் நிருபர்களிடம் சென்னிதாலா தெரிவித்தார்.

-->

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+