ஜெர்மனி, ஜப்பானில் இலங்கை அமைதிப் பேச்சு
டோக்கியோ:
விடுதலைப்புலிகள் மற்றும் இலங்கை அரசுக்கு இடையிலான 5வது சுற்றுப் பேச்சுவார்த்தைகள் ஜெர்மனியில் வரும7ம் தேதி தொடங்குகிறது. 6வது சுற்றுப் பேச்சுவார்த்தைகள் மார்ச் 18 முதல் 21ம் தேதி வரை ஜப்பானில்நடைபெறவுள்ளன.
இலங்கை அமைதிப் பேச்சுவார்த்தை முயற்சிகளில் ஜப்பான் ஆரம்பத்திலிருந்தே அதிகமான ஆர்வம் காட்டிவருகிறது.
போரினால் பாதிக்கப்பட்ட பகுதிகளில் தமிழர்களை மீண்டும் குடியமர்த்துவதற்கான நிதியுதவிகளையும் ஜப்பான்அரசு தாராளமாகவே வழங்கி வருகிறது. மேலும் கடந்த நவம்பரில் நார்வே நாட்டில் நடந்ததைப் போலவேசர்வதேச நாடுகளிடமிருந்து நிதி திரட்டுவது தொடர்பான மாநாட்டை வரும் ஜூன் மாதம் ஜப்பான் நடத்தவுள்ளது.
இதைத் தவிர, இலங்கை அமைதி முயற்சிகளில் நார்வே நாட்டுக்கு அடுத்தபடியாக தங்கள் நாட்டையும் சேர்த்துக்கொள்ள வேண்டும் என்றும் ஜப்பான் கோரி வருகிறது.
இந்நிலையில் புலிகளுக்கும் இலங்கை அரசுக்கும் இடையிலான ஆறாவது சுற்றுப் பேச்சுவார்த்தைகள் ஜப்பானில்நடைபெறும் என்று ஜப்பான் வெளியுறவுத் துறை அமைச்சகம் இன்று தெரிவித்தது.
ஜப்பானின் தலைநகரான டோக்கியோவின் மேற்கே சுமார் 70 கி.மீ. தொலைவில் அமைந்துள்ள ஹெக்கோனேஎன்ற நகரில்தான் இந்தப் பேச்சுவார்த்தைகள் நடக்கவுள்ளன. மார்ச் 18 முதல் 21ம் தேதி வரை இந்தப் பேச்சுக்கள்நடைபெறும்.
பிப்.7 முதல் ஜெர்மனியில் 5வது சுற்றுப் பேச்சு:
இதற்கிடையே வரும் 7ம் தேதி முதல் புலிகளுக்கும் இலங்கை அரசுக்கும் இடையிலான ஐந்தாவது சுற்றுப்பேச்சுவார்த்தைகள் ஜெர்மனியில் நடைபெறவுள்ளன.
ஜெர்மனியின் தலைநகரான பெர்லினில் இரு நாட்களுக்கு நடைபெறும் இந்தப் பேச்சுவார்த்தைகளில் கலந்துகொள்வதற்காக புலிகளின் அரசியல் பிரிவுத் தலைவர் சுப. தமிழ்ச் செல்வனும், ராணுவப் பிரிவுத் தலைவர்கருணாவும் நேற்று இரவு கிளம்பினர்.
இலங்கை ராணுவ ஹெலிகாப்டர் மூலம் கொழும்பு விமான நிலையத்திற்கு அழைத்துவரப்பட்ட அவர்கள்இருவரும், பின்னர் இலங்கைக்குச் சொந்தமான விமானத்தில் பெர்லின் கிளம்பிச் சென்றனர்.
லண்டனில் உள்ள புலிகளின் அரசியல் ஆலோசகரும், புலிகள் பேச்சுவார்த்தைக் குழுத் தலைவருமான ஆன்டன்பாலசிங்கம் வரும் 6ம் தேதி தன் மனைவியுடன் பெர்லினுக்குக் கிளம்பிச் செல்கிறார்.
இந்த ஐந்தாவது சுற்றுப் பேச்சுவார்த்தைகளில் புலிகள் இயக்கத்தில் உள்ள சிறுவர், சிறுமிகளை விடுவிப்பது குறித்துமுக்கியமாக விவாதிக்கப்படவுள்ளது.
சந்திரிகா கோரிக்கை:
இதற்கிடையே அமைதிப் பேச்சுவார்த்தை குறித்து பொது மக்களுக்கு முழு விவரத்தை தெரிவிக்க வேண்டும் என பிரதமர் ரணில்விக்கிரமசிங்கேவுக்கு அதிபர் சந்திரிகா குமாரதுங்கா கோரிக்கை விடுத்துள்ளார்.
நாட்டின் 55வது சுதந்திர தின உரையாற்றிய சந்திரிகா கூறுகையில், பேச்சுவார்த்தைகள் பலன் அளித்து வருவதற்காக ரணிலைப்பாராட்டுகிறேன். ஆனால், என்ன பேசுகிறார்கள், செயல் திட்டங்கள் என்ன என்பதை நாட்டுக்குத் தெரிவிக்க வேணடிய கடமைரணிலுக்கு உண்டு. அதை அவர் செய்ய வேண்டும் என்றார்.
சுதந்திர தினம்: தமிழர் பகுதிகள் புறக்கணிப்பு
இதற்கிடையே நாட்டின் 55வது சுதந்திர தினத்தை தமிழர் பகுதிகள் புறக்கணித்துவிட்டன.
நாட்டில் சிறுபான்மையினராக உள்ள தமிழர்களுக்கு இன்னும் சுதந்திரம் கிடைக்கவில்லை. இதனால் சுதந்திர தினத்தைக்கொண்டாட மாட்டோம் என்ற போஸ்டர்கள் தமிழர் பகுதிகளில் முளைத்தன.
இதையடுத்து வவுனியா உள்ளிட்ட பகுதிகளில் அரசு ஏற்பாடு செய்திருந்த சுதந்திர தினக் கொண்டாட்டங்கள் ரத்துசெய்யப்பட்டுவிட்டன.
-
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக












Click it and Unblock the Notifications