கிரிமினல் வழக்கு: அதிமுக வேட்பாளரின் வேடபு மனு நிராகரிக்கப்படுமா?
தூத்துக்குடி:
சாத்தான்குளம் தொகுதி அதிமுக வேட்பாளரான நீலமேகவர்ணம் மீது கிரிமினல் வழக்கு ஒன்று நிலுவையில்உள்ளதாகத் தெரிகிறது. இதனால் அவரது வேட்பு மனு நிராகரிக்கப்படலாம் என்று எதிர்பார்ப்பு ஏற்பட்டுள்ளது.
அதே போல அதிமுக மாற்று வேட்பாளராக அறிவிக்கப்பட்டுள்ள நீலமேகவர்ணத்தின் மகன் மீதும் ஒரு கொலைவழக்கு உள்ளதாகத் தெரிகிறதுய
சாத்தான்குளம் அதிமுக வேட்பாளராக நீலமேகவர்ணம் கடந்த 1ம் தேதி அறிவிக்கப்பட்டார்.
இதையடுத்து நேற்று அவர் சாத்தான்குளம் தொகுதி உதவி தேர்தல் அதிகாரியிடம் வேட்பு மனுவை தாக்கல்செய்தார்.
இந்நிலையில் நீலமேகவர்ணம் மீது கிரிமினல் வழக்கு ஒன்று தூத்துக்குடி நீதிமன்றத்தில் நிலுவையில் உள்ளதுதெரியவந்துள்ளது. இந்த வழக்கு இன்று விசாரணைக்கு வருகிறது. இதற்காக தூத்துக்குடி நீதிமன்றத்தில் அவர்ஆஜராகவுள்ளார்.
இந்தியத் தேர்தல் சட்டப்படி கிரிமினல் வழக்கு பதிவு செய்யப்பட்டவர்கள் தேர்தலில் போட்டியிட முடியாது.
இதையடுத்து சாத்தான்குளத்தில் போட்டியிடும் நீலமேகவர்ணத்தின் வேட்பு மனு நிராகரிக்கப்படும் ஆபத்துஏற்பட்டுள்ளது.
அதே போல இவரது மகன் கதிரவ ஆதித்தன் மீதும் கொலை வழக்கு உள்ளது. கோவில் திருவிழா ஒன்றில் ஏற்பட்டகோஷ்டி மோதலில் நடந்த கொலையில் கதிரவ ஆதித்தனுக்குத் தொடர்பிருப்பதாகத் தெரிகிறது. இவர் தான்அதிமுகவின் மாற்று வேட்பாளராக அறிவிக்கப்பட்டுள்ளார்.
இந்த வழக்கு இன்னும் நிலுவையில் உள்ளதால் அவருடைய வேட்பு மனுவும் நிராகரிக்கப்படலாம் என்றுதெரிகிறது.
-->
-
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள் -
நான் பார்த்துகிறேன் நண்பா.. உறுதியாக சொன்ன விஜய்.. அஜித் தாய் மறைந்த இரவு.. நடந்தது என்ன? -
பிளாக் அண்ட் ஒயிட் கோட் சூட் அணிவது இதற்காகத் தான்.. ரகசியத்தை போட்டு உடைத்த விஜய்! -
காலியான ராஜ்யசபா எம்பி பதவி! இன்று வேட்புமனு தாக்கல் தொடக்கம்! தவெகவின் முதல் எம்பி யார்?












Click it and Unblock the Notifications