சன் டி.வி. நிருபர் அதிரடி கைது
சென்னை:
சென்னை சைதாப்பேட்டை நீதிமன்ற வளாகத்தில் முறையான அனுமதியின்றி படம் பிடித்ததைக் கண்டித்தவக்கீல்கள் சங்கத் தலைவரைத் தாக்கியதாக சன் டி.வி. நிருபர் சுரேஷ்குமார் கைது செய்யப்பட்டார்.
சைதாப்பேட்டை நீதிமன்ற வளாகத்தில் காந்தப் படுக்கை மோசடி தொடர்பான வழக்கு விசாரணைக்கு வந்தது.அப்போது சுரேஷ்குமார் மற்றும் அவரது குழுவைச் சேர்ந்தவர்கள் நீதிமன்ற வளாகத்தில் படம் பிடித்துக்கொண்டிருந்தனர்.
அப்போது சில வக்கீல்களுடன் சைதாப்பேட்டை நீதிமன்ற வக்கீல்கள் சங்கத் தலைவர் ராமசாமி அங்கு வந்தார்.அனுமதியில்லாமல் இவ்வாறு படம் பிடிக்கக்கூடாது என்று அவர் கூறினார்.
இருப்பினும் சுரேஷ்குமார் தொடர்ந்து படம் பிடித்துள்ளார். இதைத்தொடர்ந்து அவருக்கும், ராமசாமிக்கும்இடையே தகராறு ஏற்பட்டது.
இதையடுத்து மாஜிஸ்திரேட் ஜெயபாலனை அணுகிய வக்கீல்கள் சங்கத் தலைவர் ராமசாமி, சன் டி.வி. நிருபர்சுரேஷ்குமார் தன்னைத் தாக்கியதாகப் புகார் கொடுத்தார்.
அவரது புகாரை ஏற்ற நீதிபதி ஜெயபாலன், சுரேஷ்குமாரைக் கைது செய்யுமாறு கோட்டூர்புரம் காவல் நிலையத்திற்குஉத்தரவிட்டார்.
இதைத் தொடர்ந்து சுரேஷ்குமார் கைது செய்யப்பட்டு, சைதாப்பேட்டை 17வது நீதிமன்ற நீதிபதி விஜயகாந்த் முன்புஆஜர்படுத்தப்பட்டார். அவரை 15 நாள் காவலில் வைக்க நீதிபதி உத்தரவிட்டார்.
இதைத் தொடர்ந்து சுரேஷ்குமார் சென்னை மத்திய சிறையில் அடைக்கப்பட்டார்.
சன் டி.வி. கண்டனம்:
இந்நிலையில் சுரேஷ்குமார் கைது செய்யப்பட்டதற்கு சன் டி.வி. நிர்வாகம் கடும் கண்டனம் தெரிவித்துள்ளது.
பத்திரிகை சுதந்திரத்திற்கு விடுக்கப்பட்டுள்ள மற்றொரு மிரட்டலே இது என்று சன் டி.வி. கூறியுள்ளது. இதுதொடர்பாக சன் டி.வி. நிர்வாகம் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில்,
உண்மையில் ராமசாமியும் சில வக்கீல்களும் சேர்ந்து சுரேஷ்குமாரைத் தாக்கியுள்ளனர். அவரது கையில் இருந்தகேமராவைப் பறித்து அதிலிருந்த கேசட்டையும் அவர்கள் எடுக்க முயன்றுள்ளனர்.
இது குறித்து கோட்டூர்புரம் காவல் நிலையத்தில் சுரேஷ்குமார் புகார் கொடுக்கச் சென்றபோது புகாரை வாங்கபோலீஸார் மறுத்து விட்டனர். ஆனால் ராமசாமி புகார் கொடுத்ததும் உடனடியாக போலீசார் நடவடிக்கையில்இறங்கினர்.
முறையான விசாரணை நடத்தாமல், சுரேஷ்குமாரைக் கைது செய்ததோடு, அவரது காரையும் பறிமுதல்செய்துள்ளனர். சன் டி.வி. நிறுவனத்தின் காரும் சைதாப்பேட்டை நீதிமன்ற வளாகத்தில் வக்கீல்களாலேயே அடித்துநொறுக்கப்பட்டுள்ளது என சன் டி.வி. நிர்வாகம் கூறியுள்ளது.
சன் டி.வி. நிருபர் ஒருவர் கைது செய்யப்படுவது சமீப காலங்களில் இது இரண்டாவது முறையாகும். ஏற்கனவேஒருமுறை விழுப்புரம் சன் டி.வி. நிருபர் சுரேஷ் கைது செய்யப்பட்டு பெரும் பிரச்சினையானது குறிப்பிடத்தக்கது.
நிருபர்கள் ஆலோசனை:
இந் நிலையில் சன் டிவி நிருபர் சுரேஷ்குமார் கைது விவகாரம் தொடர்பாக அடுத்து எடுக்கவேண்டிய நடவடிக்கைகள் குறித்து சென்னை பத்திரிக்கையாளர்கள்சங்கங்கள் விவாதித்து வருகின்றன.
சென்னை நிருபர்கள்சங்கம், சென்னை பத்திரிக்கையாளர் மன்றம் உள்ளிட்ட பல்வேறு பத்திரிக்கையாளர்கள் சங்கங்களின் நிர்வாகிகள் இந்த ஆலோசனைகளில்ஈடுபட்டுள்ளனர். கைதை எதிர்த்து நிருபர்கள் போராட்டத்தில் குதிப்பார்கள் என்று தெரிகிறது.
-->
-
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல் -
என்னை தொட்டிருக்கவே கூடாது.. கோவையில் வேலுமணிக்கு தண்ணி காட்டும் எடப்பாடி.. அடித்து ஆடும் வேலுசாமி -
விஜய்-ஐ அடித்து மேலே வந்த சிவக்குமார்.. லீமா ரோஸ் கொடுத்த ஷாக்! -
கொஞ்சம் அவகாசம் கொடுங்க.. எங்களுக்கு ஓட்டு போட்டதற்கு பெருமையடைய வைப்போம்.. அமைச்சர் ரமேஷ் -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
திருமணம் முதல் அஜித் தாயார் அஞ்சலி வரை! சுப, துக்க நிகழ்வுகளில் மட்டும் விஜய்யுடன் வருகிறாரா த்ரிஷா?












Click it and Unblock the Notifications