கரூரில் வெற்றிகரமாக தொடரும் தமிழ் குடமுழுக்கு விழாக்கள்
கரூர்:
கரூர் மாவட்டம் வெள்ளியணை அருகே உள்ள பாலகாளியம்மன் கோவிலில் தமிழில் குடமுழுக்கு விழாவெற்றிகரமாக நடந்தது.
கரூர் மாவட்டத்தில் பல்வேறு கோவில்களிலும் சமீப காலமாக தமிழில் குடமுழுக்கு விழாக்கள் நடத்தப்பட்டுவருகின்றன.
சேர, சோழ, பாண்டியர் காலத்தில் தமிழிலேயே திருமறைகள் ஓதப்பட்டு கோவில்களில் குடமுழுக்கு விழாக்கள்நடைபெற்று வந்தன.
ஆனால் காலப் போக்கில் சமஸ்கிருத ஆதிக்கம் வந்தது. இதனால் கும்பாபிஷேகம், சம்ப்ரோக்ஷணம் முதலிய சைவ,வைணவ கோவில்களில் குடமுழுக்கு விழாக்கள் சமஸ்கிருத வேத மந்திரங்களுடன்தான் நடந்து வருகின்றன.
ஆனால் கடந்த ஆறு மாதங்களுக்கு முன் கரூர் அருகே காவிரி ஆற்றின் கரையில் அமைந்துள்ள திருமுக்கூடலூர்சிவன் ஆலயத்தில் தமிழில் குட முழுக்கு விழா நடத்த முடிவு செய்யப்பட்டது.
இதற்கு தமிழக அரசின் இந்து சமய அறநிலையத்துறை எதிர்ப்புத் தெரிவித்தது. தமிழில் குடமுழுக்கு நடத்த தமிழகஅரசே எதிர்ப்புத் தெரிவிக்கும் என இக்கோவில் நிர்வாகிகள் நினைக்கவில்லை.
மேலும் காஞ்சி சங்கராச்சாரியாரான ஸ்ரீஜெயேந்திர சுவாமிகளும் தமிழில் குடமுழுக்கு விழாவை நடத்த எதிர்ப்புதெரிவித்தார். ஆகம முறைப்படி சமஸ்கிருதத்தில் மந்திரம் ஓதாமல் நடத்தப்படும் இந்தக் குடமுழுக்கு விழாவால்பலன் இருக்காது என்றும் அவர் கூறினார்.
ஆனால், அத்தனை எதிர்ப்புகளையும் மீறி அதை நடத்த கோவில் நிர்வாகமும் அந்தக் கிராம மக்களும் முடிவுசெய்தனர்.
அதன்படி சிவன் கோவிலில் கடந்த ஆண்டு செப்டம்பர் 9ம் தேதி தமிழிலேயே குடமுழுக்கு விழா வெற்றிகரமாகநடத்தப்பட்டது. தமிழறிஞர்களும் சிவ பக்தர்களும் மக்கள் முன்னிலையில் அழகான தமிழில் வேத மந்திரங்களைஓதி குடமுழுக்கு விழாவை சிறப்பாக நடத்தினர்.
இதைத்தொடர்ந்து கரூர் மாவட்டத்தில் உள்ள பல கோவில்களிலும் வெற்றிகரமாக தமிழிலேயே குடமுழுக்குநிகழ்ச்சிகள் சிறப்பாக நடந்து வருகின்றன.
அந்த வரிசையில் வெள்ளியணை அருகே உள்ள பாலகாளியம்மன் கோவிலில் சமீபத்தில்திருப்பணிகள்முடிந்தன.
இதைத் தொடர்ந்து நேற்று தமிழில் குடமுழுக்கு விழா நடந்தது. பல்வேறு சிவாச்சாரியார்கள் இதில் கலந்துகொண்டு தமிழிலேயே குடமுழுக்கை சிறப்பாக நடத்தி வைத்தனர்.
தேவாரம், திருவாசகம் உள்ளிட்ட பன்னிரு திருமுறைகள் ஓதப்பட்டு குடமுழுக்கு நிகழ்ச்சி நடந்தது.
நிகழ்ச்சியில் ஆயிரக்கணக்கான பக்தர்கள் கலந்து கொண்டு குடமுழுக்கு விழாவைக் கண்டு களித்தனர்.
-->
-
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல் -
என்னை தொட்டிருக்கவே கூடாது.. கோவையில் வேலுமணிக்கு தண்ணி காட்டும் எடப்பாடி.. அடித்து ஆடும் வேலுசாமி -
விஜய்-ஐ அடித்து மேலே வந்த சிவக்குமார்.. லீமா ரோஸ் கொடுத்த ஷாக்! -
கொஞ்சம் அவகாசம் கொடுங்க.. எங்களுக்கு ஓட்டு போட்டதற்கு பெருமையடைய வைப்போம்.. அமைச்சர் ரமேஷ் -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
திருமணம் முதல் அஜித் தாயார் அஞ்சலி வரை! சுப, துக்க நிகழ்வுகளில் மட்டும் விஜய்யுடன் வருகிறாரா த்ரிஷா?












Click it and Unblock the Notifications